பதிவு செய்த நாள்
16 ஜூன்2019
00:28

புதுடில்லி:வரப்போகும் பட்ஜெட்டை முன்னிட்டு, தகவல் தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகள், மத்திய நிதித் துறை இணை
அமைச்சர், அனுராக் தாகூரை நேற்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, வரி விதிப்புகள், டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டது.இது குறித்து, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்த சந்திப்பின்போது பங்கேற்றவர்கள், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக ஏஞ்சல் டேக்ஸ், அசெம்பிளி தயாரிப்பு இடையேயான வரி விகித முரண்பாடுகள், வரிச் சலுகைகள் தொடர்வது குறித்து, கருத்துகளை தெரிவித்தனர். இந்த சந்திப்பில், நிதியமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொலை தொடர்பு அமைச்சகம், மத்திய நேரடி வரிகள் ஆணையம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|