பதிவு செய்த நாள்
16 ஜூன்2019
00:31
புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான, ‘இன்போசிஸ்’ நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான, முதல் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, ஜூலை 12ம் தேதி வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:ஜூலை 11 மற்றும் 12ம் தேதிகளில், நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. ஜூலை 12ல் நிதி நிலை அறிக்கை, நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, டி.சி.எஸ்., நிறுவனம், ஜூலை 9ம் தேதியும், ‘விப்ரோ’ நிறுவனம், ஜூலை, 17ம் தேதியும் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|