பதிவு செய்த நாள்
21 ஜூன்2019
06:16
சென்னை: ‘தமிழகத்தில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, பிரத்யேகமான கொள்கை தேவை’ என, தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளது, சி.ஐ.ஐ., எனும், இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பு. சி.ஐ.ஐ., தமிழகப் பிரிவின் தலைவர், எஸ்.சந்திரமோகன் தலைமையிலான குழு, சமீபத்தில் தமிழக முதல்வர், இ.பி.எஸ்.,சை சந்தித்தது.
இது குறித்து இவ்வமைப்பு தெரிவித்துள்ளதாவது: சந்திப்பில், தமிழக தொழில் துறைக்காக அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்காக, பிரத்யேகமான கொள்கை தேவை என, வலியுறுத்தப்பட்டது. பசுமை விமான நிலையம் அமைப்பது, இரண்டாம் நிலை நகரங்களுக்கான விமான சேவை ஆகியவை குறித்தும், கோரிக்கை வைக்கப்பட்டது. முதல்வர், இ.பி.எஸ்., ‘தொழில் துறை முன்னேற்றத்துக்கு தேவையான முயற்சிகள் அனைத்தும் எடுக்கப்படும்’ என, தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|