பதிவு செய்த நாள்
02 ஜூலை2019
23:33
புதுடில்லி:டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த ஜனவரியிலிருந்து, ஒரு நானோ காரை கூட தயாரிக்கவில்லை. மேலும், கடந்த ஆறு மாதங்களில், ஒரே ஒரு, நானோ கார் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, நிறுவனத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஆறு மாதங்களில், ஒரு நானோ கார் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்காலகட்டத்தில், ஒரு நானோ கார் கூட தயாரிக்கப்படவில்லை.ஆனால், இதை வைத்து, நிறுவனம், நானோ கார் தயாரிப்பை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக கருதிவிடக் கூடாது. தேவையைப் பொறுத்து, மக்களின் காரான, நானோ, தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.
கடந்த, 2018 டிசம்பரில், 82 நானோ கார்கள் தயாரிக்கப்பட்டன. அதன் பிறகு ஒரு கார் கூட தயாரிக்கப்படவில்லை. பிப்ரவரி மாதத்தில், ஒரு கார் மட்டும் விற்பனை ஆனது. கடந்த, 2008ம் ஆண்டு, 1 லட்சம் ரூபாய் விலையில், நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|