பதிவு செய்த நாள்
06 ஜூலை2019
23:52

சென்னை:வீட்டுவசதி நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, தேசிய வீட்டுவசதி வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்ப பெற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பொதுத் துறை, தனியார் வங்கிகள், ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றன. இவற்றில் இருந்து, மக்கள், வீட்டுக் கடன்களை பெறுகின்றனர்.
இதேபோல், வங்கி சாரா தனியார் வீட்டுவசதி நிதி நிறுவனங்களும் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களின் கடன் வழங்கும் செயல்பாடுகளை நெறிப்படுத்த, தேசிய வீட்டுவசதி வங்கி, 1987ல், துவங்கப்பட்டது.வீட்டுக்கடன் திட்டங்களை செயல்படுத்த, இந்நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் தருவது உள்ளிட்ட பணிகளை, தேசிய வீட்டுவசதி வங்கி கண்காணிக்க வேண்டும்.
இந்நிலையில், தனியார் வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கு, கடன் வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.இது குறித்து, உயர் நிலை விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. மேலும், புகாருக்கு ஆளான சில அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். இதனால், தேசிய வீட்டுவசதி வங்கியின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
இந்நிலையில், தனியார் வீட்டுவசதி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் தேசிய வீட்டுவசதி வங்கியின் அதிகாரம் பறிக்கப்பட்டு, அது மீண்டும் இந்திய ரிசர்வ் வங்கியிடமே ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இதனால், தேசிய வீட்டுவசதி வங்கி, அதிகாரம் இல்லாத அமைப்பாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|