பதிவு செய்த நாள்
08 ஜூலை2019
13:22

மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று(ஜூலை 08) காலை துவக்கம் முதல் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாயின. வங்கிகள் மற்றும் ஆட்டோ துறை பங்குகள் பெருமளவு சரிந்ததால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடனேயே காணப்படுகின்றன.
ஜூலை 5 அன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆட்டோ துறையை ஊக்குவிக்கும் வகையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 5.2 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஆட்டோ துறை பங்குககள் 2.4 சதவீதமும், உலோகத்துறை பங்குகள் 2.3 சதவீதமும் சரிவடைந்துள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் 4 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளன.
இதனால் காலையில் வர்த்தகம் துவங்கிய போது 400 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ், பகல் 11.50 மணி நிலவரப்படி 597 புள்ளிகள் சரிந்து 38,888 புள்ளிகளாகவும், நிப்டி 191 புள்ளிகள் சரிந்து 11,621 புள்ளிகளாகவும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|