பதிவு செய்த நாள்
10 ஜூலை2019
23:39
புதுடில்லி:ஜூன்
மாதத்தில், உள்நாட்டில், பயணியர் வாகன விற்பனை, 18 சதவீதம்
சரிவைக் கண்டுள்ளதாக, இந்திய வாகன தயாரிப்பாளர்கள்
கூட்டமைப்பான, ‘சியாம்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:உள்நாட்டில், பயணியர் வாகன விற்பனை, ஜூன் மாதத்தில், 17.54 சதவீதம் சரிவை கண்டுள்ளது.ஜூன்
மாதத்தில், மொத்தம், 2.26 லட்சம் வாகனங்கள் விற்பனை
செய்யப்பட்டுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 2.74 லட்சம்
வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
கார் விற்பனையைப்
பொருத்தவரை, 24.97 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூனில்,
1.84 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில்,
இந்தாண்டு ஜூனில், 1.40 லட்சம் கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.இருசக்கர
வாகன விற்பனையில், 11.69 சதவீதம் சரிவு காணப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜூனில், 16.50 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த
ஆண்டு ஜூனில், விற்பனை, 18.68 லட்சம் ஆகும்.
மோட்டார் சைக்கிள்
பிரிவில், விற்பனை, கடந்த ஜூனில், 10.85 லட்சமாக குறைந்துள்ளது.
இதுவே, கடந்த ஆண்டு ஜூனில், 11.99 லட்சமாக அதிகரித்து இருந்தது.
அதாவது. 9.57 சதவீதம் சரிவு கண்டுஉள்ளது.வர்த்தக வாகனங்கள்
விற்பனையிலும், 12.27 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன்
மாதம், மொத்தம், 70 ஆயிரத்து, 771 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் விற்பனை, 80 ஆயிரத்து, 670 ஆகும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|