ஜூன் மாதத்திலும் தொடரும் வாகன விற்பனை சரிவு ஜூன் மாதத்திலும் தொடரும் வாகன விற்பனை சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன விற்பனை 18 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2019
23:39

புது­டில்லி:ஜூன் மாதத்­தில், உள்­நாட்­டில், பய­ணி­யர் வாகன விற்­பனை, 18 சத­வீ­தம் சரி­வைக் கண்­டுள்­ள­தாக, இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் கூட்­ட­மைப்­பான, ‘சியாம்’ தெரி­வித்­துள்­ளது.இது­ கு­றித்து, இவ்­வ­மைப்பு மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:உள்­நாட்­டில், பய­ணி­யர் வாகன விற்­பனை, ஜூன் மாதத்­தில், 17.54 சத­வீ­தம் சரிவை கண்­டுள்­ளது.ஜூன் மாதத்­தில், மொத்­தம், 2.26 லட்­சம் வாக­னங்­கள் விற்­பனை செய்­யப்­பட்­டுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில், 2.74 லட்­சம் வாக­னங்­கள் விற்­பனை செய்­யப்­பட்­டி­ருந்­தன.கார் விற்­ப­னை­யைப் பொருத்­த­வரை, 24.97 சத­வீ­தம் சரி­வ­டைந்­துள்­ளது. கடந்த ஆண்டு ஜூனில், 1.84 லட்­சம் கார்­கள் விற்­பனை செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யில், இந்­தாண்டு ஜூனில், 1.40 லட்­சம் கார்­கள் மட்­டுமே விற்­பனை ஆகி­யுள்ளன.இரு­சக்­கர வாகன விற்­ப­னை­யில், 11.69 சத­வீ­தம் சரிவு காணப்­பட்­டுள்­ளது. நடப்­பாண்டு ஜூனில், 16.50 லட்­சம் வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன. கடந்த ஆண்டு ஜூனில், விற்­பனை, 18.68 லட்­சம் ஆகும்.


மோட்­டார் சைக்­கிள் பிரி­வில், விற்­பனை, கடந்த ஜூனில், 10.85 லட்­ச­மாக குறைந்­துள்­ளது. இதுவே, கடந்த ஆண்டு ஜூனில், 11.99 லட்­ச­மாக அதி­க­ரித்து இருந்­தது. அதா­வது. 9.57 சத­வீ­தம் சரிவு கண்­டுஉள்­ளது.வர்த்­தக வாக­னங்­கள் விற்­ப­னை­யி­லும், 12.27 சத­வீ­தம் சரிவு ஏற்­பட்­டுள்­ளது. கடந்த ஜூன் மாதம், மொத்­தம், 70 ஆயி­ரத்து, 771 வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் விற்­பனை, 80 ஆயி­ரத்து, 670 ஆகும்.இவ்­வாறு அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புது­டில்லி:வாகன விற்­பனை, தொடர்ந்து சரி­வினை சந்­தித்து வரும் நிலை­யில், கடந்த ஜூன் மாதத்­தி­லும், பய­ணி­யர் ... மேலும்
business news
புது­டில்லி:டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னம், கடந்த ஜன­வ­ரி­யி­லி­ருந்து, ஒரு நானோ காரை கூட தயா­ரிக்­க­வில்லை. மேலும், ... மேலும்
business news
புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனத்தின் ஜூன் மாத மொத்த விற்பனை, 14 சதவீதம் அளவுக்கு சரிவினை சந்தித்துள்ளது.ஜூன் ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்களின், சில்லரை விற்பனை, 1 சதவீதம் குறைந்து, 2.51 லட்சம் வாகனங்கள் ... மேலும்
business news
புது­டில்லி:உள்­நாட்­டில், பய­ணி­யர் வாக­னங்­கள் விற்­பனை, கடந்த மே மாதத்­தில் கடு­மை­யான சரிவை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
Raj - coimbatore,India
12-ஜூலை-201908:16:38 IST Report Abuse
Raj இது மக்கள் மகிழ்ச்சி கொள்ள கூடிய செய்தி. ரோடு எல்லாம் விரிவாக்கம் செய்ய வேண்டியதில்லை. எல்லா ஊர்களிலும் மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். இதனால் சாலைகளில் நெருக்கடி குறையும். அந்நிய செலாவணி மிச்சமாகும். சுற்று சூழல் மாசுபடுவது நிறுத்தப்படும். குறைந்த தூரம் செல்ல uber , ola போன்ற கால் டாக்ஸி சேவைகள் வந்த பிறகு மக்கள் தங்கள் வாழ்க்கை முறை மாற்றி வருவதை தான் இந்த செய்தி பிரதிபலிக்கிறது. பொருளாதார பின்னடைவு பற்றி எனக்கு தெரியவில்லை. வீடு விற்பனை குறைந்தால் பொருளாதார பின்னடைவு உறுதிப்படுத்த படலாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Sivaprakasam Manickam - Chennai,India
11-ஜூலை-201909:02:19 IST Report Abuse
Sivaprakasam Manickam பயணியர் கார் விற்பனை சரிவு நடக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம். இப்போது நடந்திருப்பது தான் சரியான பிரதிபலிப்பு, நாட்டின் பொருளாதாரம் பின்னடைவை நோக்கி செல்லும். கார்கள் உற்பத்தி ஆகும் அளவில் அவை செல்வதற்கான சாலைகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பது உண்மை. நகர்ப்புற சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. காலை ஏழு மணி முதல் பன்னிரண்டு மணி வரை போக்குவரத்து நெரிசல் அதனால் சராசரியாக ஒரு வாகனத்தின் வேக அளவு ஒரு மணி நேரத்திற்கு பத்து கிலோ மீட்டருக்கு மேல் செல்ல முடியாது. பொருளாதாரத்தில் எந்த துறையை எடுத்தாலும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)