லாப பாதைக்கு திரும்புவோம் நடப்பாண்டில் ஐ.ஓ.பி., நம்பிக்கைலாப பாதைக்கு திரும்புவோம் நடப்பாண்டில் ஐ.ஓ.பி., நம்பிக்கை ... சாட்டையை சுழற்றும் ரிசர்வ் வங்கி ஓராண்டில் 1,701 நிதி நிறுவன உரிமங்கள் ரத்து சாட்டையை சுழற்றும் ரிசர்வ் வங்கி ஓராண்டில் 1,701 நிதி நிறுவன உரிமங்கள் ரத்து ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஐந்தே ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ‘ஜன் தன்’ திட்டத்தில் குவிந்த தொகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2019
23:43

புது­டில்லி:வங்­கி­களில், ‘பிர­தான் மந்­திரி ஜன் தன் யோஜனா’ திட்­டத்­தின் கீழ் துவக்­கப்­பட்ட கணக்­கு­களின் இருப்­புத் தொகை, அறி­மு­கம் செய்­யப்­பட்ட ஐந்தே ஆண்­டு­களில், 1 லட்­சம் கோடி ரூபா­யைத் தாண்­டி­யுள்­ளது என, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.




வீட்­டுக்கு ஒரு வங்­கிக் கணக்கு எற்­ப­டுத்­து­வ­தற்­காக, ’பிர­தான் மந்­திரி ஜன் தன் யோஜனா’ எனும் பெய­ரில், மக்­கள் நிதி திட்­டத்தை, 2014ல் சுதந்­திர தின உரை­யின்­போது, பிர­த­மர் மோடி அறி­மு­கம் செய்­தார். இதைஅ­டுத்து இத்­திட்­டம், 2014 ஆகஸ்ட் 28ல் துவக்­கப்­பட்­டது.ஏழை­கள் மற்­றும் பின்­தங்­கிய மக்­கள், அரசு நலத் திட்­டங்­கள் மூலம் பயன்­பெற, இந்த வங்கி கணக்கு உத­வும் வகை­யில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.



நிதி தீண்­டா­மையை அகற்­று­வ­தற்­காக இத்­திட்­டம் துவங்­கப்­ப­டு­கிறது என­வும், வங்­கிக் கணக்­கின் மூலம், நேர­டி­யாக பணப் பரி­வர்த்­தனை செய்­யப்­ப­டு­வ­தால், ஊழல் மற்­றும் முறை­கே­டு­கள் குறை­யும் என­வும், மத்­திய அரசு அறி­வித்­தது.இந்த கணக்­கு­களில், குறைந்­த­பட்ச இருப்பு தொகை பரா­ம­ரிக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.இந்­நி­லை­யில், அறி­மு­கம் செய்­யப்­பட்ட, ஐந்தே ஆண்­டு­களில், இருப்­புத் தொகை, 1 லட்­சம் கோடி ரூபா­யைத் தாண்­டி­யுள்­ளது.




இது­ கு­றித்து, மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:மக்­கள் நிதி திட்­டத்­தின் கீழ், 36.06 கோடி கணக்­கு­களில், ஜூலை, 3ம் தேதி நில­வ­ரப்­படி, இருப்­புத் தொகை, 1 லட்­சத்து, 496 கோடி ரூபா­யாக உயர்ந்­து உள்­ளது.பய­னா­ளி­களின் கணக்­கில், வைப்­புத் தொகை படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து வரு­கிறது. ஜூன், 6ம் தேதி நில­வ­ரப்­படி, 99 ஆயி­ரத்து, 650 கோடி ரூபா­யாக இருந்­தது. அதற்கு முந்­தைய வாரத்­தில், 99 ஆயி­ரத்து, 233 கோடி ரூபா­யாக இருந்­தது.



பூஜ்­ஜிய இருப்பு கணக்­கு­களின் எண்­ணிக்கை, 2018 மார்ச் மாதத்­தில், 5.10 கோடி­யாக இருந்­தது. இது, மொத்த கணக்­கு­களில், 16.22 சத­வீ­தம் ஆகும்.இந்த பூஜ்ய இருப்பு கணக்­கு­களின் எண்­ணிக்கை, 2019 மார்ச் மாதத்­தில், 5.07 கோடி­யாக குறைந்­து­விட்­டது. இது, மொத்த கணக்­கு­களில், 14.37 சத­வீ­தம் ஆகும்.இத்­திட்­டத்­தில் கணக்கு வைத்­தி­ருப்­ப­வர்­களில், 28.44 கோடிக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு, ரூபே டெபிட் கார்­டு­கள் வழங்­கப்­பட்­டுள்ளன.



இத்­திட்­டத்­திற்கு எதிர்­பார்த்­த­தற்­கும் மேலாக வர­வேற்பு கிடைத்­ததை அடுத்து, 2018 ஆகஸ்ட், 28ம் தேதிக்­குப் பிறகு துவக்­கப்­பட்ட, புதிய கணக்­கு­க­ளுக்­கான, விபத்து காப்­பீட்­டுத் தொகை, 1 லட்­சம் ரூபா­யி­லி­ருந்து, 2 லட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­பட்­டது.மேலும், ‘ஓவர் டிராப்ட்’ எனும், மிகைப் பற்று வரம்­பும், 10 ஆயிரம் ரூபா­யாக இரட்­டிப்­பாக்­கப்­பட்­டுள்­ளது.அது­மட்­டு­மின்றி, ‘ஒவ்­வொரு வீட்­டுக்­கும் வங்கி கணக்கு’ என்ற நிலை­யி­லி­ருந்து, ‘ஒவ்­வொரு தனி­
ந­ப­ருக்­கும் வங்கி கணக்கு’ என்ற இலக்கை நோக்கி இத்­திட்­டம் தற்­போது முன்­னேறி செல்­கிறது.


இத்­திட்­டத்­தின் கீழ் கணக்கு வைத்­தி­ருப்­ப­வர்­களில், 50 சத­வீ­தத்­துக்­கும் அதி­க­மா­னோர் பெண்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)