நிதியமைச்சரின் அறிவிப்புக்கு பின்னணி காரணம் இதுதான் நிதியமைச்சரின் அறிவிப்புக்கு பின்னணி காரணம் இதுதான் ...  தொழிற்சாலைகள் எண்ணிக்கை தமிழகத்துக்கு கிடைத்தது முதலிடம் தொழிற்சாலைகள் எண்ணிக்கை தமிழகத்துக்கு கிடைத்தது முதலிடம் ...
தொழிற்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2019
23:35

தமி­ழக அர­சின் நிலம் கைய­கப்­ப­டுத்­தும் சட்­டத்தை, உயர் நீதி­மன்­றம் ரத்து செய்­துள்­ள­தால், தொழிற்­சா­லை­க­ளுக்­காக கைய­கப்­ப­டுத்த இருந்த, 10 ஆயி­ரம் ஏக்­கர் நிலம் எடுக்­கும் பணி பாதிக்­கப்­பட்­டுள்­ளது.அரசு திட்­டங்­க­ளுக்­காக கைய­கப்­ப­டுத்­தப்­படும் தனி­யார் நிலங்­க­ளுக்கு, நியா­ய­மான இழப்­பீடு வழங்­கும் வகை­யில், ‘நியா­ய­மான இழப்­பீடு, வெளிப்­ப­டைத் தன்மை, மறு­வாழ்வு மற்­றும் மறு குடி­ய­மர்வு’ என்ற சட்­டத்தை, 2013ல், மத்­திய அரசு நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது.
புதிய சட்­டத்­தில் இருந்து, மாநில அர­சின் நிலம் கைய­கப்­ப­டுத்­தும் சட்­டங்­க­ளான, மாநில நெடுஞ்­சா­லை­கள் சட்­டம், தொழில் பயன்­பாட்­டிற்­கான நிலம் கைய­கப்­ப­டுத்­தும் சட்­டம் மற்­றும் ஹரி­ஜன் நலச் சட்­டம் போன்ற சட்­டங்­க­ளுக்கு விலக்கு பெறும் வகை­யில், 2015ல், 105 (அ) என்ற புதிய சட்­டப் பிரிவை தமி­ழக அரசு சேர்த்­தது.இந்­நி­லை­யில், தமி­ழக அரசு இயற்­றிய புதிய பிரிவை ரத்து செய்து, சென்னை, உயர் நீதி­மன்­றம் சமீ­பத்­தில் உத்­த­ர­விட்­டது.இதன்­படி, கைய­கப்­ப­டுத்­தும் பணி­கள் முடிந்­தி­ருந்­தால், இந்த தீர்ப்பு பொருந்­தாது என­வும் குறிப்­பி­டப்­பட்­டுஉள்­ளது.இது குறித்து, தொழில் துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:நீதி­மன்ற உத்­த­ர­வை­ய­டுத்து, 2013, ஆக.,க்கு பின், நிலம் கைய­கப்­ப­டுத்த மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள பணி­கள் அனைத்­தும் பாதிக்­கப்­பட்­டுள்ளன.இத­னால், 10 ஆயி­ரம் ஏக்­கர் நிலம் கைய­கப்­ப­டுத்த முடி­யாத சூழல் ஏற்­பட்­டுள்­ளது.தொழிற்­சா­லை­கள் அமைக்க போதி­ய நிலம் இருந்­தால் மட்­டுமே, பெரு நிறு­வ­னங்­கள் தமி­ழ­கத்­தில் முத­லீடு செய்ய முன் வரு­ம்.இவ்­வாறு, அவர்­கள் கூறி­னர்.


– நமது நிரு­பர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புது­டில்லி: ‘‘முத்ரா திட்­டத்­தின் கீழ் வழங்­கப்­பட்ட கடன்­களில், 2 சத­வீத கடன்­கள், வாராக் கட­னாக ... மேலும்
business news
ஜி.எஸ்.டி., சட்­டத்­தின் கீழ் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட, ‘இ – வே’ பில் முறை­யில், ஏழு கோடி பில்­கள் பதி­வு­டன், ... மேலும்
business news
புது­டில்லி: மத்­திய அரசு, நிதி திரட்­டும் முயற்­சி­யில் ஒரு பகு­தி­யாக, ‘கோல் இந்­தியா’ நிறு­வ­னத்­தின், லாபம் ... மேலும்
business news
புது­டில்லி: ‘நடப்பு நிதி­யாண்­டில், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 7 சத­வீ­த­மாக ... மேலும்
business news
சென்னை: இந்­தி­யா­வில், ‘டிஜிட்­டல்’ பணப் பரி­வர்த்­த­னை­யில், தமி­ழ­கம் நான்­காம் இடத்­தில் உள்­ள­தாக, ‘ரேஸர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
Raj - coimbatore,India
12-ஜூலை-201908:19:30 IST Report Abuse
Raj இப்போது விற்கும் விலையில் நிலம் கையகப்படுத்துவது பல ஊழல்களுக்கு வழி வகுக்கும். கவனம் தேவை.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Gajageswari - mumbai,India
12-ஜூலை-201906:09:47 IST Report Abuse
Gajageswari அரசு ரியல் எஸ்டேட் தொழில் செய்யக்கூடாது.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)