ஐந்தே ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய்  ‘ஜன் தன்’ திட்டத்தில் குவிந்த தொகைஐந்தே ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ‘ஜன் தன்’ திட்டத்தில் குவிந்த ... ...  உலக வங்கியில் பொறுப்பேற்கும் ஸ்டேட் பேங்க் அதிகாரி உலக வங்கியில் பொறுப்பேற்கும் ஸ்டேட் பேங்க் அதிகாரி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சாட்டையை சுழற்றும் ரிசர்வ் வங்கி ஓராண்டில் 1,701 நிதி நிறுவன உரிமங்கள் ரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2019
23:47

மும்பை:கடந்த நிதி­யாண்­டில் மட்­டும், 1,701 வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­களின் உரி­மங்­களை, ரிசர்வ் வங்கி ரத்து செய்­துள்­ளது.இந்­நி­று­வ­னங்­கள், தங்­க­ளது குறைந்­த­பட்ச மூல­தன தேவையை பூர்த்தி செய்ய தவ­றிய கார­ணத்­தால், உரி­மங்­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்ளன.கடந்த ஆண்டு, அக்­டோ­பர் மற்­றும் நவம்­பர் மாதங்­களில் மட்­டும், 779 நிறு­வ­னங்­களின் உரி­மங்­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்ளன. 2017 – -18ம் நிதி­யாண்­டில், 26 நிறு­வ­னங்­களின் உரி­மங்­கள் மட்­டுமே ரத்து செய்­யப்­பட்­டி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.
அவகாசம்
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறு­வ­னம், பெரும் நிதி சிக்­க­லில் மாட்­டி உள்ளதால், அதன் விளை­வாக, வங்­கி­யல்­லாத நிறு­வ­னங்­கள் துறை­யில் பணப்­பு­ழக்­கம் பாதிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, பல நிறு­வ­னங்­கள் நிதித் தேவையை பூர்த்தி செய்ய முடி­யாத நிலைக்கு தள்­ளப்­பட்­டன.
மேலும், கடந்த காலங்­களில், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­களை ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தில், அதிக அக்­கறை காட்­டப்­ப­ட­வில்லை. ஆனால், தற்­போது நிலைமை மாறி­விட்­டது.இப்­போது, இவற்­றின் நிதிச் செயல்­பா­டு­கள் உன்­னிப்­பாக கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்றன. ரிசர்வ் வங்கி சாட்­டையை சுழற்ற ஆரம்­பித்­துள்­ளது.ஒரு வங்கி சாரா நிதி நிறு­வ­ன­மா­னது, நிகர சொந்த நிதி­யாக, 25 லட்­சம் ரூபாய் வைத்­தி­ருக்க வேண்­டும் என்று, 1997ம் ஆண்­டில், ரிசர்வ் வங்கி ஆணை­யிட்­டது.இதன் பின், 1999ல், புதிய பதி­வு­க­ளுக்கு, சொந்த நிதி, 2 கோடி ரூபா­யாக இருக்க வேண்­டும் என, உயர்த்தி அறி­வித்­தது. ஏற்­க­னவே செயல்­பட்டு வரும் நிறு­வ­னங்­கள், அவற்­றின் சொந்த நிதியை படிப்­ப­டி­யாக அதி­க­ரித்­துக் கொள்ள, அவ­கா­சம் வழங்­கப்­பட்­டது.இதற்­கான கெடு தேதி­யான, 2017 மார்ச், 31ம் தேதிக்­குப் பிற­கும், இந்த மூல­தன தேவையை பூர்த்தி செய்­யாத நிறு­வ­னங்­களின் உரி­மங்­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்ளன.வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளைப் பொறுத்­த­வரை, உரி­மத்தை இழந்­தா­லும், அவை தொடர்ந்து செயல்­பட முடி­யும்.
வங்கி கடன்
ஆனா­லும், அவை வங்­கி­க­ளி­லி­ருந்தோ அல்­லது நிதிச் சந்­தை­க­ளி­லி­ருந்தோ, நிதி திரட்ட இய­லா­மல் போய் விடும்; அவற்­றின் கையி­லி­ருந்து மட்­டுமே கடன் வழங்க முடி­யும்.உரி­மம் ரத்­தா­னால், இந்­நி­று­வ­னங்­க­ளுக்கு, வங்­கி­கள் கட­னு­தவி வழங்­காது. இத­னால், ஒரு­கட்­டத்­தில் இழுத்து மூடப்­படும் நிலைக்கு சென்­று­வி­டும்.இது குறித்து, உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:

ரிசர்வ் வங்கி நினைத்­தால், வங்கி சாரா நிதி நிறு­வன சொந்த நிதி­யின் வரம்பை, 100 கோடி ரூபாய் வரை உயர்த்த முடி­யும்.அப்­படி ஒரு முடிவை, ரிசர்வ் வங்கி எடுத்­து­விட்­டால், படிப்­ப­டி­யாக அதை நிறை­வேற்­றும் முயற்­சி­யில் நிச்­ச­ய­மாக இறங்­கும்.அதே சம­யம், இந்­நி­று­வ­னங்­களின் உரி­மங்­களை ரத்து செய்­வதை, நிறு­வ­னங்­களின் தவ­றான நிர்­வாக செயல்­பா­டு­க­ளு­டன் இணைத்து பார்க்­கக்­கூ­டாது. அதற்­கும், இந்த முடி­வு­க­ளுக்­கும் எந்த சம்­பந்­த­மும் கிடை­யாது.வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள், ரிசர்வ் வங்­கி­யால் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தா­லும் கூட, அவை, நிறு­வ­னங்­கள் சட்­டத்­தால் தான் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்றன.இவ்­வாறு அவர் கூறி­னார்.நிறு­வ­னங்­கள் எண்­ணிக்கை

மார்ச், 31ம் தேதி நில­வ­ரப்­படி, 9,659 வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள் ரிசர்வ் வங்­கி­யில் பதிவு செய்­யப்­பட்­டுள்ளன. வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள் பெரும்­பா­லும் வங்கி கடன், கடன் பத்­தி­ரங்­கள் மற்­றும் வணிக ஆவ­ணங்­கள் மூல­மாக நிதி திரட்­டு­கின்றன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
துடில்லி : ரிசர்வ் வங்கி, உபரி நிதியாக எவ்வளவு இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்பதுதொடர்பான அறிக்கையை, பிமல் ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 8 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்றால், அதற்கு, வெளிநாட்டு ... மேலும்
business news
வரிச்சலுகையை மட்டும் முதன்மையாக கருதாமல், ‘பென்ஷன்’ திட்டமான, என்.பி.எஸ்., எப்படி செயல்படுகிறது என்பதை ... மேலும்
business news
புது­டில்லி:ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யா­வின், நிர்­வாக இயக்­கு­னர், அன்­ஷுலா காந்த், உலக வங்­கி­யின், நிர்­வாக ... மேலும்
business news
புது­டில்லி:வங்­கி­களில், ‘பிர­தான் மந்­திரி ஜன் தன் யோஜனா’ திட்­டத்­தின் கீழ் துவக்­கப்­பட்ட கணக்­கு­களின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)