தமிழக அரசு ஆபீசுக்கு ஐ.எஸ்.ஓ., தமிழக அரசு ஆபீசுக்கு ஐ.எஸ்.ஓ., ... கமாடிட்டி சந்தை கமாடிட்டி சந்தை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
00:01

தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், நிப்டி, கடந்த ஜூன் மாதத்­தில், வர­லாற்று உச்­சத்தை அடைந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. ஜூன் மாத உயர்­வான, 12,106 புள்­ளி­களில் இருந்து, தற்­போது, 550 புள்­ளி­கள் சரிந்து, வர்த்­த­க­மாகி வரு­கிறது.


மார்ச் முதல் மே வரை­யி­லான, மூன்று மாத காலங்­களில், இந்­திய பங்­குச் சந்­தை­கள், குறிப்­பி­டத்­தக்க அளவு உயர்ந்­தி­ருந்­தன. அதா­வது, நடந்து முடிந்த லோக்­சபா தேர்­த­லுக்கு முன், விலை­யேற்­றம் காணப்­பட்ட பங்­குச் சந்­தை­கள், தேர்­த­லுக்­குப் பின், தற்­போது சிறிய அள­வி­லான சரி­வு­டன் வர்த்­த­க­மாகி வரு­கின்றன.இடைக்­கால பட்­ஜெட் தாக்­கல் செய்­யப்­பட்­ட­போது, அதில் பங்­குச் சந்­தை­கள் குறித்து, ஒரு சில அறி­விப்­பு­கள் வெளி­யா­கின. இதில், வெளி­நாட்டு
முத­லீட்­டா­ளர்­கள், நம் சந்­தை­யில் முத­லீடு செய்­வ­தற்­கான கொள்­கை­களில் அறி­வித்த மாற்­றம், சந்­தையை பாதித்­தது.மேலும், பட்­டி­ய­லி­டப்­பட்ட நிறு­வ­னங்­களில், பொதுப் பங்­கு­களின், குறைந்­த­பட்ச மூல­தன முத­லீட்டு வரம்பு, 25 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 35 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தாக, பட்­ஜெட்­டில் அறி­விக்­கப்­பட்­டது. இதை, இரண்டு ஆண்­டு­க­ளுக்­குள் அமல்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டது. இதன் கார­ண­மா­க­வும், பங்­குச் சந்­தை­கள் பாதிப்பை சந்­தித்­தன.இத்­து­டன், மேலும் பல கார­ணங்­க­ளால், மாத தொடக்­கத்­தி­லி­ருந்தே பங்­குச் சந்­தை­கள் சரிந்து வர்த்­த­க­மாகி வரு­கின்றன.இந்­தி­யா­வின் தொழில் துறை வளர்ச்சி குறி­யீடு, மே மாதத்­தில், 3.1 சத­வீ­த­மாக சரிவை சந்­தித்­துள்­ளது. இது, இதற்கு முந்­தைய மாதத்­தைக் காட்­டி­லும் குறை­வா­கும்.கடந்த நிதி­யாண்­டின், நான்­காம் காலாண்­டான, ஜன­வரி முதல், மார்ச் வரை­யி­லான கால­கட்­டத்­தில், இந்­தி­யா­வின், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 5.8 சத­வீ­த­மாக இருந்­த­தாக, மத்­திய அர­சின் புள்­ளி­ வி­ப­ரம் தெரி­விக்­கிறது.


இது, கடந்த ஐந்து ஆண்­டு­களில் இதே கால­கட்­டத்­தோடு ஒப்­பி­டும்­போது, குறை­வா­கும். நடப்பு நிதி­யாண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 7.1 சத­வீ­த­மா­க­வும், அடுத்த நிதி­யாண்­டில், 7.2 சத­வீ­த­மா­க­வும் இருக்­கும் என்று பொரு­ளா­தார ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


பண­வீக்க விகி­தம் மற்­றும் பொரு­ளா­தார வளர்ச்சி எதிர்­பார்ப்பு ஆகி­ய­வற்றை, ரிசர்வ் வங்கி குறைத்­துள்­ளது. முந்­தைய நிதி­யாண்­டின் நான்­காம் காலாண்­டில், பண­வீக்க விகி­தம், 2.4 சத­வீ­த­மா­க­வும், நடப்பு நிதி­யாண்­டின் முதல் ஆறு மாதங்­க­ளுக்கு, 3.2 சத­வீ­த­மா­க­வும் இருக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு முன், இது, 3.4 சத­வீ­த­மாக மதிப்­பி­டப்­பட்டு இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.இந்த வாரத்­தைப் பொறுத்­த­வரை, நிப்டி சப்­போர்ட், 11,465 மற்­றும் 11,390; ரெசிஸ்­டென்ஸ் 11,590 மற்­றும் 11,630.

முருகேஷ் குமார்

murukesh.munar@choiceindia.com

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)