தமிழக அரசு ஆபீசுக்கு ஐ.எஸ்.ஓ., தமிழக அரசு ஆபீசுக்கு ஐ.எஸ்.ஓ., ... இலக்கை தீர்மானிக்கும்  சமூக ஊடகங்கள் இலக்கை தீர்மானிக்கும் சமூக ஊடகங்கள் ...
கமாடிட்டி சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
00:28

கச்சா எண்ணெய்

கச்சா எண்­ணெய் விலை, கடந்த வாரம், 4 சத­வீ­தம் உயர்ந்து, 1 பேரல், 60 அமெ­ரிக்க டாலரை எட்­டி­யுள்­ளது.அமெ­ரிக்­கா­வின், எண்­ணெய் உற்­பத்தி பகு­தி­களில், கடந்த சில தினங்­க­ளாக ஏற்­பட்­டுள்ள சூறா­வளி காற்று, கச்சா எண்­ணெய் உற்­பத்­தியை கடு­மை­யா­கப் பாதித்­துள்­ளது.


‘பேரி’ என பெய­ரி­டப்­பட்­டுள்ள சூறா­வளி காற்று, தொடர்ந்து அச்­சு­றுத்தி வரும் சூழ­லில், எண்­ணெய் உற்­பத்தி, 60 சத­வீ­தம் சரிந்து, தற்­போது, தின­சரி உற்­பத்தி, 1.1 மில்­லி­யன் பேரல் ஆக உள்­ளது.ஈரான் மற்­றும் வெனி­சுலா நாடு­கள் மீது, அமெ­ரிக்க அரசு கொண்டு வந்­துள்ள பொரு­ளா­தா­ர தடை­யால், அந்­நா­டு­களின் எண்­ணெய் உற்­பத்தி கடு­மை­யா­க பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ஏற்­று­ம­தி­யைப் பொறுத்­த­வரை, கடந்த, 30 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு, தற்­போது சரிந்­துள்­ளது.

அமெ­ரிக்கா மற்­றும் இந்­நா­டு­க­ளுக்கு இடை­யே­யான அசா­தா­ரண சூழல் கார­ண­மாக, கச்சா எண்­ணெய் விலை, கடந்த வாரம் உயர்ந்­தது.இருப்­பி­னும், உலக நாடு­களின் கச்சா எண்­ணெய் தேவை குறைந்து, அமெ­ரிக்­கா­வின் உற்­பத்தி அதி­க­ரித்து வரு­கிறது.இந்த சூழ­லில், அடுத்த ஒன்­பது மாதங்­களில், தேவைக்கு அதி­க­மாக உற்­பத்தி செய்­யப்­பட்டு, இருப்பு அதி­க­ரிக்­கும் என்று தெரி­வித்­துள்­ளது, சர்­வ­தேச எரி­பொ­ருள் கழ­கம்.


எண்­ணெய் உற்­பத்தி நாடு­கள், இதை கருத்­தில் கொண்டு, உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு, சந்­தை­யில் சீரான போக்­கிற்கு வழி­வ­குக்­கு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
ஒபெக் நாடு­களின் எண்­ணெய் உற்­பத்தி, 2020ம் ஆண்­டில் குறைந்து, தின­சரி தேவை, 28 மில்­லி­யன் பேரல் ஆக இருக்­கும் என்று கரு­தப்­ப­டு­கிறது. தற்­போது, இந்­நா­டு­களின் தின­சரி மொத்த உற்­பத்தி, 30 மில்­லி­யன் பேரல்­கள்.


இதற்­கி­டையே, அமெ­ரிக்­கா­வின் எண்­ணெய் உற்­பத்தி அதி­க­ரித்து வரு­கிறது. உலக அள­வில், தின­சரி உற்­பத்­தி­யில், அமெ­ரிக்கா முத­லி­டம் வகிக்­கிறது. இரண்­டா­வ­தாக, சவுதி அரே­பி­யா­வும், மூன்­றா­வ­தாக, ரஷ்­யா­வும் உள்ளன.அமெ­ரிக்­கா­வில் இயங்கி வரும், ஆழ்­கு­ழாய் கிண­று­
களின் எண்­ணிக்கை, தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது. தற்­போது, 892 குழாய்­கள் செயல்­பட்டு வரு­கின்றன. 2015, மார்ச் மாதத்­துக்­குப் பிறகு, இதுவே அதி­க­மா­கும்.


சவுதி அரே­பியா, ரஷ்யா மற்­றும் அமெ­ரிக்கா ஆகிய நாடு­களின் மொத்த உற்­பத்தி, ஒட்­டு­மொத்த உல­கின் நுகர்வு தேவை­யில், 60 சத­வீ­தத்தை பூர்த்தி செய்­கிறது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தங்கம் வெள்ளி


சர்­வ­தேச சந்­தை­யில், கடந்த வார ஆரம்ப நாட்­களில், தங்­கத்­தின் விலை, சரிந்து வர்த்­த­கம் ஆன போதி­லும், புதன் கிழமை அன்று விலை அதி­க­ரித்­தது. வட்டி விகி­தம் குறித்த, அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யின் அறி­விப்பே, இந்த விலை உயர்­வுக்கு கார­ண­மாக அமைந்­தது.
பொரு­ளா­தார வளர்ச்­சியை முன்­னிட்டு, இம்­மா­தம் நடை­பெற இருக்­கும் வட்டி விகித கொள்கை கூட்­டத்­தில், வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­ட­லாம் என, அமெ­ரிக்­கா­வின், மத்­திய வங்கி தலை­வர் கருத்து தெரி­வித்­தி­ருந்­தார்.
இதன் கார­ண­மாக, அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்­பில் சரிவு ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து, பொருள் வாணிப சந்­தை­யில், தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை அதி­க­ரித்­தது.மேலும், வார இறுதி நாளான வெள்­ளி­யன்று, அமெ­ரிக்­கா­வில் வெளி­யான, பண­வீக்க விகி­தம், எதிர்­பார்த்­த­தை­விட அதிக அள­வில் இருந்­தது. கடந்த ஆண்டு, ஜன­வரி மாதத்­துக்கு பிறகு, தற்­போது தான் பண­வீக்க விகி­தம் மிக­வும் அதி­க­ரித்­துள்­ளது.


இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கா­வில், வரும், 30, 31ம் தேதி­களில் நடை­பெற உள்ள, மத்­திய வங்­கி­யின் கூட்­டத்­தில், வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­டுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.
பண­வீக்க விகி­தத்தை குறைக்­கும் பொருட்டு, வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­ட­லாம் என்ற எதிர்­பார்ப்பு உள்­ளது. இதற்­கி­டையே, அமெ­ரிக்க அரசு பணி­யில் சேர்ந்­த­வர்­கள் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­தால், வட்டி விகி­தத்­தில் எந்த ஒரு மாற்­றத்­தை­யும், மத்­திய வங்கி செய்­யாது என மாற்­றுக் கருத்­தும் உள்­ளது.


பொது­வாக, வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­டும்­போது, அரசு கரு­வூ­லங்­களின் ஆதா­யம் குறை­யும். இதன் கார­ண­மாக, முத­லீட்­டா­ளர்­கள் தங்­கத்­தின் மீது தங்­க­ளது முத­லீட்டை அதி­க­ரிப்­பர்.
அதே­ச­ம­யம், வட்­டி­வி­கி­தம் அதி­க­ரிக்­கப்­பட்­டால், தங்­கத்­தில் செய்­தி­ருக்­கும் முத­லீட்டை திரும்ப பெற்று, அரசு கரு­வூ­லங்­கள் போன்­ற­வற்­றில் முத­லீடு செய்­வர்.எனவே, வட்டி விகித மாற்­றங்­கள், பொருள் வாணிப சந்­தை­யில், அமெ­ரிக்க நாணய குறி­யீட்­டின் மதிப்பு உய­ர­வும், சரி­ய­வும் கார­ண­மாக அமைந்து விடு­கிறது. இத­னால், இதை சார்ந்­துள்ள, அனைத்து கமா­டிட்டி பொருட்­களின் விலை­யி­லும் கடு­மை­யான தாக்­கம் ஏற்­ப­டு­கிறது.கடந்த சில வாரங்­க­ளா­கவே, சர்­வ­தேச சந்­தை­யில், 1 அவுன்ஸ் தங்­கம், 1,400 அமெ­ரிக்க டால­ருக்கு மேல் வர்த்­த­க­மாகி வரு­கிறது. உள்­நாட்டை பொறுத்­த­வரை ஆப­ரண சந்­தை­யில், தங்­கம் விலை உயர்ந்­துள்­ளது.உள்­நாட்­டில், ஆப­ரண சந்­தை­யில், இரண்டு முக்­கி­ய­மான கார­ணங்­க­ளால் தங்­கம் விலை அதி­க­ரித்­தது.
மத்­திய பட்­ஜெட்­டில், தங்­கம் மீதான இறக்­கு­மதி வரி, 10 சத­வீ­தத்­தில் இருந்து, 12.5 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டது, ஒரு முக்­கி­ய­மான கார­ண­மா­கும்.அடுத்­த­தாக, டால­ருக்கு நிக­ரான, இந்­திய ரூபா­யின் மதிப்பு மீண்­டும் சரிந்து உள்­ள­தால், இறக்­கு­மதி செய்­யப்­படும் தங்­கத்­தின் விலை அதி­க­ரித்­துள்­ளது.நாட்­டின் மொத்த தேவை­யில் பெரும்­ப­குதி, இறக்­கு­மதி மூல­மா­கவே ஈடுகட்­டப்­ப­டு­கிறது.
செம்புசெம்பு விலை, கடந்த மூன்று மாதங்­க­ளா­கவே, தொடர்ந்து, சரி­வில் வர்த்­த­க­மாகி வரு­கிறது. உல­கின் ஒட்­டு­மொத்த பொரு­ளா­தார வளர்ச்சி சரிவு, செம்பு விலை குறைய மிக­வும் முக்­கி­ய­மான கார­ண­மாகி உள்­ளது.செம்பு, அதிக அள­வில் நுக­ரப்­படும் நாடு, சீனா. இந்­நாட்­டில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார வளர்ச்சி மந்­தம், செம்பு விலையை கடு­மை­யாக பாதித்து வரு­கிறது.


அத்­து­டன், சீனா மற்­றும் அமெ­ரிக்­கா­வுக்கு இடையே நடை­பெற்று வரும் வர்த்­தக மோதல் போக்­கால், இரு நாடு­களின் ஏற்­று­ம­தி­யும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால், தொழில் துறை வளர்ச்­சி­யில் சரிவு ஏற்­பட்­டுள்­ளது. தொழில் துறை வளர்ச்­சி­யில் ஏற்­பட்­டுள்ள சரிவு, செம்பு நுகர்வை கடு­மை­யாக பாதித்­துள்­ளது.செம்பு உலோ­கத்தை, உல­க­ள­வில், தொழிற்­சா­லைக்கு அதி­கம் பயன்­ப­டுத்­தும் நாடு, சீனா. எனவே, இந்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சியை முன்­வைத்து, கமா­டிட்டி பொருட்­களின் விலை மதிப்பு, நிர்­ண­யம் செய்­யப்­ப­டு­கிறது.தற்­போ­தைய சூழ­லில், சீனா­வின், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி குறை­யும் என்ற அச்­சம் கார­ண­மா­க­வும், செம்பு விலை சரிந்து வரு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)