பதிவு செய்த நாள்
15 ஜூலை2019
00:30

இந்திய இளம் தலைமுறையினரின் புதிய வாழ்வியல் இலக்குகள், சமூக ஊடகங்களின் தாக்கத்தால் தீர்மானிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
‘பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ்’ நிறுவனம், ‘வாழ்க்கை இலக்குகள் தயார் நிலை’ என்ற, ஆய்வை நடத்தியது. இளம் தலைமுறையினரில், 20 சதவீதத்தினரின் வாழ்வியல்
இலக்குகளில் ஐந்தில் ஒன்று, சமூக ஊடக தாக்கத்தால் தீர்மானிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சொந்த வீடு வாங்குவது, ஓய்வு கால திட்டமிடல் போன்ற இலக்குகள், நண்பர்கள்
வட்டத்தின் தாக்கத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.
எனினும்,
வெளிநாட்டு பயணம், பிட்னசில் கவனம் செலுத்துவது, சொகுசு கார்
வாங்குவது போன்ற புதிய இலக்குகளை தீர்மானிப்பதில், சமூக ஊடகங்கள்
முக்கிய பங்கு வகிக்கின்றன.
இளம் தலைமுறையினர் சேமிப்பதில்
ஆர்வம் காட்டுவதில்லை என கூறப்படும் நிலையில், 42 சதவீதத்தினர்
ஓய்வு கால திட்டமிடலை தங்களின் முக்கிய இலக்குகளின் ஒன்றாக
கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
பெண்களை பொறுத்தவரை பயணம் சார்ந்த மற்றும் ஆரோக்கியம் சார்ந்த இலக்குகளை முதன்மையாக கருதுகின்றனர். மேலும், இளம் தலைமுறையினரில் ஒரு பிரிவினர், நன்கொடை சார்ந்த செயல்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமூக சேவை அல்லது மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை ஒரு இலக்காக கொண்டுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|