பதிவு செய்த நாள்
16 ஜூலை2019
03:06

சென்னை:தமிழகத்தில், சுய உதவிக்குழு வங்கி இணைப்பு திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகளில் சிறப்பாக பணியாற்றிய, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, நபார்டு வங்கி, விருது வழங்கி உள்ளது.இது குறித்து, நபார்டு வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:நபார்டு வங்கியின், 38வது ஆண்டு துவக்க விழா, சென்னையில், சமீபத்தில் நடந்தது.
இதில், தமிழகத்தில் சுய உதவிக்குழு – வங்கி இணைப்பு திட்டத்தின் கீழ், ஐ.ஓ.பி., சிறப்பாக பணியாற்றி வருகிறது. குறிப்பாக, கிராமப்புற பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, மகளிர் சுய உதவிக்குழு இணைப்பு வாயிலாக, அவர்களை வங்கி சேவைக்கு உட்படுத்தி உள்ளது.இதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 2018 – -19ம் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளில், சுய உதவிக்குழு – வங்கி இணைப்பில், மிகச் சிறப்பாக பணியாற்றிய வங்கிக்கான இரண்டாம் பரிசை, ஐ.ஓ.பி.,க்கு, நபார்டு வங்கி வழங்கி உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|