பதிவு செய்த நாள்
16 ஜூலை2019
03:07

புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த, ‘கெயில் இந்தியா’ நிறுவனத்தை, இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. குழாய் வாயிலாக எரிவாயு விநியோகம் செய்யும் பிரிவை, பெருநிறுவன முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வது குறித்து, அரசு பரிசீலனை செய்து வருகிறது.
நாட்டின் மிகப் பெரிய, இயற்கை எரிவாயு நிறுவனமான, கெயில் வசம், 16 ஆயிரத்து, 234 கிலோமீட்டர் நீளத்திற்கான, குழாய் வசதி உள்ளது. இதன் மூலம், எரிவாயு வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதலில் இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், இயற்கை எரிவாயுவை பயன்படுத்துபவர்கள், தங்கள் சொந்த எரிவாயுவை கொண்டு செல்வதற்காக, குழாய்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, கெயில் நிறுவனத்தை, இரண்டாகப் பிரிப்பது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது. குழாய் வாயிலாக எரிவாயு விநியோகம் செய்வதை, ஒரு தனி நிறுவனமாக மாற்றுவதற்கும், அதில் பெரும்பான்மையான பங்குகளை விற்கவும், அரசு இப்போது முயன்று வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|