பதிவு செய்த நாள்
16 ஜூலை2019
03:09

புதுடில்லி:தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் பங்குகள் விலை, நேற்று, 7.20 சதவீதம் அதிகரித்தது.நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், எதிர்பார்த்ததற்கும் மேலாக, இன்போசிஸ் நிறுவனம் அதிக நிகர லாபம் ஈட்டியதால், இந்நிறுவனத்தின் பங்குகள் விலை, நேற்று, 7.20 சதவீதம் அதிகரித்தது.
இதன் காரணமாக, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பில், 17 ஆயிரத்து, 636 கோடி ரூபாய் அதிகரித்தது.நேற்று, இந்நிறுவனத்தின் பங்கு விலை, மும்பை பங்குச் சந்தையில், 779.45 ரூபாயாக நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில், 779.40 ரூபாயாக நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே, பங்கின் விலை, 781.40 ரூபாயை எட்டியது. இது, இந்நிறுவன பங்கின், 52 வார அதிகமாகும்.நேற்றைய உயர்வின் காரணமாக, இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 17 ஆயிரத்து, 636 கோடி ரூபாய் அதிகரித்து, 3.35 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|