பதிவு செய்த நாள்
16 ஜூலை2019
03:12

புதுடில்லி:நாட்டின் மொத்த விலை பணவீக்கம், ஜூன் மாதத்தில், இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2.02 சதவீதமாகக் குறைந்துள்ளது.மொத்த விலை பணவீக்கம், தொடர்ந்து இரண்டாவது மாதமாக, ஜூன் மாதத்திலும் குறைந்துள்ளது. இது, 23 மாதங்களில் இல்லாத அளவுக்கு, 2.02 சதவீதமாகக் குறைந்து உள்ளது.
கடந்த, 2017ம் ஆண்டு, ஜூலை மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 1.88 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தான், 2.02 சதவீதமாக குறைந்த அளவில் உள்ளது.காய்கறிகள், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் விலை குறைவால், ஜூன் மாதத்தில், இந்த அளவுக்கு மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது.மே மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 2.45 சதவீதமாக இருந்தது. இதுவே, கடந்த ஆண்டு, இதே ஜூன் மாதத்தில், 5.68 சதவீதமாக அதிகரித்திருந்தது.உணவுப் பொருட்கள் பணவீக்கம், மே மாதத்தில், 6.99 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில், 6.98 சதவீதமாகக் குறைந்துள்ளது.பணவீக்கம்இதேபோல், காய்கறிகள் பணவீக்கம், மே மாதத்தில், 33.15 சதவீதமாக இருந்தது, ஜூனில், 24.76 சதவீதமாக குறைந்துள்ளது.உருளைக்கிழங்கை பொறுத்தவரை, மே மாதத்தில், மைனஸ் 23.36 சதவீதத்தில் இருந்தது, ஜூனில், மைனஸ் 24.27 சதவீதமாக உள்ளது.வெங்காயத்தைப் பொறுத்தவரை, மே மாதத்தில் பணவீக்கம், 15.89 சதவீதமாக இருந்தது, ஜூன் மாதத்தில், 16.63 சதவீதமாக அதிகரித்துள்ளது.எரிபொருள், மின்சாரம் ஆகிய பிரிவுகளில், பணவீக்கம், மே மாதத்தில், 0.98 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்தில், மைனஸ் 2.20 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், தயாரிப்பு பொருட்கள் பணவீக்கமும், மே மாதத்தில், 1.28 சதவீதமாக இருந்தது, 0.94 சதவீதமாக குறைந்து உள்ளது.ரிசர்வ் வங்கி வட்டிஏப்ரல் மாதத்துக்கான, மொத்த விலை பணவீக்கம், 3.07 சதவீதத்திலிருந்து, 3.24 சதவீதமாக திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட, சில்லரை விலை பணவீக்கம், ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு, 3.18 சதவீதமாக உயர்ந்திருந்தது. இதற்கு, உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு காரணமாக அமைந்து விட்டது.ரிசர்வ் வங்கி, அதன் வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை, சில்லரை பணவீக்கத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கிறது.
ஜூன், 6ம் தேதியன்று, கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக, 5.75 சதவீதமாக வட்டிவிகிதத்தை குறைத்து அறிவித்தது.இருப்பினும், 2019--– 20ம் ஆண்டுக்கான பணவீக்க எதிர்பார்ப்பை, 3 சதவீதத்திலிருந்து, 3.1 சதவீதமாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.நிச்சயமற்ற பருவமழை, காய்கறி விலையில் தொடர் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலைகள், நிதிச் சந்தைகளின் ஏற்ற இறக்கம் மற்றும் நிதி சூழ்நிலை ஆகியவை, பணவீக்கத்திற்கான அபாயங்களை கோடிட்டுக் காட்டுவதாகவே இருக்கின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|