பயணியர் வாகனங்கள் விற்பனை சரிவு பயணியர் வாகனங்கள் விற்பனை சரிவு ... ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையில் தமிழகம் நான்காம் இடம் ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையில் தமிழகம் நான்காம் இடம் ...
ஜூன் மாதத்தில் ஏற்றுமதி சரிவு; எட்டு மாதங்களில் முதன் முறையாக பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
04:22

புதுடில்லி: நாட்டின் ஏற்றுமதி, ஜூன் மாதத்தில், 9.7 சதவீதமாக சரிவை சந்தித்துள்ளன. இது, கடந்த எட்டு மாதங்களில் இல்லாத சரிவு; இறக்குமதியும், 9 சதவீதம் சரிந்துள்ளது.

ஜூன் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 1.73 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ளது. இறக்குமதியை பொறுத்தவரை, மதிப்பீட்டு மாதத்தில், 2.78 லட்சம் கோடி ரூபாய் அளவில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, ஜூன் மாதத்தில், 1.05 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூனில், வர்த்தகப் பற்றாக்குறை, 1.15 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

நவ ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் சாதனங்கள், பெட்ரோலியப் பொருட்கள், பிளாஸ்டிக், கைவினைப் பொருட்கள், அனைத்துப் பிரிவு ஆயத்த ஆடைகள், ரசாயனம், தோல், கடல் பொருட்கள், எண்ணெய் வித்துகள், புண்ணாக்கு ஆகியவற்றின் ஏற்றுமதி சரிவால், ஒட்டு மொத்த ஏற்றுமதி குறைந்துள்ளது.

இது குறித்து, வர்த்தகத் துறை செயலர், அனுப் வாதவன் கூறியதாவது: கடந்த ஆண்டு, ஜூனில், ஏற்றுமதி மதிப்பு, 1.91 லட்சம் கோடி ரூபாய். உலக அளவிலான போக்குகள், கடந்த சில மாதங்களாக, நாட்டின் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. உலக பொருளாதார வாய்ப்புகள் குறித்து, உலக வங்கி, கடந்த மாதம் வெளியிட்ட அதன் அறிக்கையிலும், நடப்பு ஆண்டில், உலகளவிலான வர்த்தகம், மந்தமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், உலகளாவிய வர்த்தகம், இந்த ஆண்டு, 2.6 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது முந்தைய கணிப்பை விட குறைவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஓ.என்.ஜி.சி., மங்களூர் பெட்ரோகெமிக்கல் நிறுவனம், பராமரிப்பு பணிகளுக்காக, ஏப்ரல், 17 முதல், ஜூன், 28ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டது. இது, பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியில், கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதேபோல், ஜாம் நகர் சுத்திகரிப்பு ஆலையும், பராமரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக அளவில், உருக்கு பொருட்கள் விலை சரிந்தது, பொறியியல் சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.ஒட்டுமொத்தமாக, ஏப்ரல் – ஜூன் வரையிலான காலத்தில், ஏற்றுமதி, 1.69 சதவீதம் குறைந்துள்ளது. இறக்குமதியைப் பொறுத்தவரை, 0.29 சதவீதம் குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில், வர்த்தகப் பற்றாக்குறை, 3.11 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில், வர்த்தகப் பற்றாக்குறை 3.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

ஜூன் மாதத்தில், தங்கம் இறக்குமதி, 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில், இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு, 18 ஆயிரத்து, 630 கோடி ரூபாய்.ரிசர்வ் வங்கியின் தகவலின்படி, சேவைகள் ஏற்றுமதி, மே மாதத்தில், 15.49 சதவீதமாக அதிகரித்துள்ளது; இதன் மதிப்பு, 1.29 லட்சம் கோடி ரூபாய்.சேவைகள் இறக்குமதி, மே மாதத்தில், 22.37 சதவீதம் அதிகரித்துள்ளது; இதன் மதிப்பு, 86 ஆயிரத்து, 181 கோடி ரூபாய்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தேவையை அதிகரிக்க உதவும் வகையில், வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகளை ... மேலும்
business news
புதுடில்லி; மத்திய அரசு, பல பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீடு ... மேலும்
business news
பெங்களூரு; சமீப காலமாக, நுகர்வோர்கள் செலவு செய்வது குறைந்திருக்கும் நிலையிலும், வணிக மால்களை கட்டுபவர்கள், ... மேலும்
business news
புதுடில்லி, ஜன. 23–டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2010ம் ... மேலும்
business news
டாவோஸ் : உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, ‘இன்டர்நெட்’ இணைப்பு தேவை என, ‘கூகுள்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)