பதிவு செய்த நாள்
24 ஜூலை2019
07:12

புதுடில்லி: ரிசர்வ் வங்கியின், துணை கவர்னர், விரால் ஆச்சார்யா, தன் பதவிக் காலம் முடிய, ஆறு மாதங்கள் இருந்த நிலையில், கடந்த மாதம், தனது பதவியை ராஜினாமா செய்வதாக, அறிவித்திருந்தார்.
ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி, நேற்றுடன், ரிசர்வ் வங்கியில், தன் பணியை அவர் முடித்தார்.கடந்த, 2017ம் ஆண்டு, ஜனவரியில், ரிசர்வ் வங்கி துணை கவர்னராக, ஆச்சார்யா பொறுப்பேற்றார்.ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த, உர்ஜித் படேல், மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
அவரைத் தொடர்ந்து தற்போது விரால் ஆச்சார்யாவும், பதவிக்காலம் முடியும் முன்னரே ராஜினாமா செய்துஉள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குறித்து, கவர்னர், சக்திகாந்த தாசுக்கும், துணை கவர்னர், விரால் ஆச்சார்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.அதன் எதிரொலியாகவே, விரால் ஆச்சார்யா, ராஜினாமா செய்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|