பதிவு செய்த நாள்
25 ஜூலை2019
05:11

புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ‘எல் அண்டு டி’ நிறுவனத்தின் நிகர லாபம், 22 சதவீதமாக அதிகரித்து, 1,472 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், நிகர லாபம், 1,215 கோடி ரூபாயாக இருந்தது.
இது குறித்து, இந்நிறுவனத்தின், தலைமை நிதி அதிகாரி, ஆர்.சங்கர் ராமன் மேலும் கூறியதாவது: நிறுவனத்தின் வருவாய், 9.74 சதவீதம் அதிகரித்து, 29 ஆயிரத்து, 636 கோடி ரூபாயாகியுள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 27 ஆயிரத்து, 5 கோடியாக இருந்தது. சர்வதேச வருவாய், 31 சதவீதம் அதிகரித்து, 9 ஆயிரத்து, 268 கோடி ரூபாயாக உள்ளது. மதிப்பீட்டு காலத்தில், 38 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் மதிப்பிலான, புதிய, ‘ஆர்டர்’களை நிறுவனம் பெற்றுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடும் போது, 11 சதவீத வளர்ச்சி. மொத்த ஆர்டர்களில், வெளிநாட்டு ஆர்டர்களின் பங்கு, 23 சதவீதம்.‘மைண்டுடிரீ’ நிறுவனத்தை பொறுத்தவரை, ஜூன் மாத முடிவில், 28.86 சதவீத பங்குகளை வாங்கியிருந்தோம். தற்போது, 60.59 சதவீதமாக அதிகரித்துள்ளது.இரண்டாவது காலாண்டில் தான், இந்நிறுவனத்தின் நிதி நிலையை, எங்கள் துணை நிறுவனங்களோடு சேர்த்து பார்க்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மைண்டுடிரீ நிறுவனத்தின், தலைமை பொறுப்புகளில் நபர்களை அமர்த்துவது குறித்து, தலைமை செயல் அதிகாரி, எஸ்.என்.சுப்ரமணியன் கூறியதாவது: மைண்டுடிரீ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகியோர் பதவி விலகியுள்ள நிலையில், அப்பதவிக்கு, புதிய நபர்களை தேர்ந்தெடுத்து, விரைவில் அறிவிப்போம். இவ்வாறு, அவர் கூறினார். சமீபத்தில், மைண்டுடிரீ நிறுவனத்தின் செயல்சாரா தலைவராக, ஏ.எம்.நாயக் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|