பதிவு செய்த நாள்
25 ஜூலை2019
05:13

ஈரோடு: சீனாவில் இருந்து, பட்டு நுால் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் உற்பத்தியாகும் பட்டுக் கூடு மற்றும் பட்டு நுால் விலை உயராமல் உள்ளது.
கடந்த ஓராண்டாக மழை இன்றி, வறட்சி அதிகரித்துள்ளதாலும், போதிய அளவு நீர் கிடைக்காததாலும், பட்டுக் கூடு உற்பத்தி பரப்பு குறைந்து, உற்பத்தியும் வீழ்ந்துள்ளது. இருப்பினும், சீனாவில் இருந்து அதிக அளவில் பட்டு நுால் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு பட்டுக் கூடு மற்றும் பட்டு நுாலுக்கு போதிய விலை கிடைக்கவில்லை.
இது பற்றி, பட்டு வளர்ப்பு விவசாயிகள் சங்க தலைவர், வி.கே.சண்முக சுந்தரமூர்த்தி கூறியதாவது: கடந்தாண்டு, நவ.,க்கு முன், 1 கிலோ வெள்ளை பட்டுக் கூடு, 650 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த, டிச., முதல், இதன் விலை சரிந்து, கிலோ, 350 முதல், 400 ரூபாய் வரை விற்பனையாகிறது. உள்நாட்டில் பட்டுக் கூடு, பட்டு நுால் தேவை அதிகமாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தி, அந்த அளவுக்கு இல்லை என்பதால், சீனாவில் இருந்து, விலை குறைந்த, தரம் குறைந்த பட்டு நுால் இறக்குமதி செய்யப்படுகிறது.
கர்நாடகா, ஆந்திராவில், கிலோவுக்கு, 50 ரூபாய் ஊக்கத் தொகை தருகின்றனர். தமிழகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன், 10 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. தற்போது, முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.பட்டு நுால் இறக்குமதிக்கு கட்டுப்பாடும், 15 சதவீதத்துக்கு மேல் வரியும் விதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|