பதிவு செய்த நாள்
30 ஜூலை2019
07:04

புதுடில்லி, ஜூலை 30–மத்திய அரசு, மூன்றிலிருந்து, நான்கு பிராந்திய கிராமப்புற வங்கிகளின், புதிய பங்கு வெளியீட்டுக்கு திட்டமிட்டு வருகிறது.
இந்த பங்கு வெளியீடு, நடப்பு நிதியாண்டிலேயே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில வங்கிகளின் இணைப்புக்கு பின், இந்த பங்கு வெளியீடு இருக்கும் என, கருதப்படுகிறது.அதிகரிக்கும்நாட்டில் உள்ள, பிராந்திய கிராமப்புற வங்கிகள் சிலவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், வங்கிகளின் எண்ணிக்கையை, 45லிருந்து, 38 ஆகக் குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மாநில அரசுகளும், சில வங்கிகளின் ஒருங்கிணைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.ஒரே மாநிலத்துக்குள் இருக்கும், பிராந்திய கிராமப்புற வங்கிகளை இணைப்பதன் மூலம், அதன் நிர்வாகச் செலவுகள் குறையும்.மேலும், தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அடிப்படை மூலதனம், செயல்படும் பரப்பளவு ஆகியவையும் அதிகரிக்கும்.இந்த வகையில், கடந்த சில மாதங்களில், 21 கிராமப்புற வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.
கிராமப்புற வங்கிகளின் பங்கு வெளியீடு குறித்து, இத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒருங்கிணைக்கப்பட்ட கிராமப்புற வங்கிகளின் புதிய பங்கு வெளியீடு, நடப்பு ஆண்டிலேயே இருக்கக்கூடும். கடந்த, 1976ல் ஏற்படுத்தப்பட்ட கிராமப்புற வங்கிகள் சட்டம், பின்னர், 2015ல் திருத்தப்பட்டது.
இதன் மூலம், இத்தகைய வங்கிகள், மத்திய – மாநில அரசுகள், நிதியுதவி வங்கிகள் ஆகியவற்றிடமிருந்து மட்டுமின்றி, வேறு சில வழிகளிலும் அவற்றுக்கு தேவையான மூலதனத்தை திரட்ட அனுமதி வழங்கப்பட்டது.ரூ.235 கோடிதற்போது, இந்த கிராமப்புற வங்கிகளில், 50 சதவீதத்தை மத்திய அரசும், 35 சதவீதத்தை ஸ்பான்சர் வங்கிகளும், 15 சதவீதத்தை மாநில அரசுகளும் வைத்துள்ளன.கிராமப்புற வங்கிகளின் பங்கு விலக்கலுக்கு பிறகும், திருத்தப்பட்ட சட்டத்தின் படி, மத்திய அரசு மற்றும் ஸ்பான்சர் வங்கிகளின் பங்கு, 51 சதவீதத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும்.இதனால், இந்த வங்கிகளின் மீதான உரிமையும், கட்டுப்பாடும் அரசிடமே தொடர்ந்து இருக்கும்.கடந்த, 2005ம் ஆண்டில், பிராந்திய கிராமப்புற வங்கிகளின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் துவங்கின.இதையடுத்து, 2006ல், வங்கிகளின் எண்ணிக்கை, 196 என்பதிலிருந்து, 133 ஆகக் குறைக்கப்பட்டது.ஒரு கட்டத்தில், இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து, 105 ஆனது. பின், 2012 மார்ச்சில், 82 ஆகவும், பின்னர் மேலும் குறைந்து, 56 ஆகவும் ஆனது.நடப்பு நிதியாண்டில், இத்தகைய வங்கிகளின் மறுமூலதனத்துக்காக, 235 கோடி ரூபாய், மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்த வங்கிகள், தங்கள் மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளும்.இவ்வாறு அவர் கூறினார்.நோக்கம்கிராமப்புறங்களில் உள்ள சிறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு கடன் மற்றும் பிற வசதிகளை வழங்கும் நோக்கில், பிராந்திய கிராமப்புற வங்கிகள் சட்டத்தின் கீழ், 1976ல் இந்த கிராமப்புற வங்கிகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|