பதிவு செய்த நாள்
31 ஜூலை2019
05:21

சென்னை: ஐ.ஓ.பி., எனும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை, 10 ஆயிரம் கோடியிலிருந்து, 15 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தி, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, ஐ.ஓ.பி., வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியன் ரிசர்வ் வங்கி உடன், மத்திய அரசு ஆலோசனை நடத்திய பின், அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை, 5,000 கோடி ரூபாய் உயர்த்தி உள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தின் மதிப்பு, 10 ஆயிரம் கோடியிலிருந்து, 15 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் பங்கு மூலதனத்தை, 300 கோடி ரூபாய் வரை உயர்த்த, வங்கியின் வாரிய உறுப்பினர்கள் அனுமதி அளித்துள்ளனர்.இதற்கான உரிய வழிகளில், பங்கு மூலதனத்தை உயர்த்த, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|