பதிவு செய்த நாள்
02 ஆக2019
11:23

சென்னை : தங்கம் விலை இன்று(ஆக.,2) ஒரே நாளில் சவரன் ரூ.584 அதிகரித்து, புதிய உச்சமாக ரூ.27 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.
சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,372க்கும் சவரன் ரூ.496 உயர்ந்து ரூ.26,976க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.35,290க்கும் விற்பனையானது. மாலையில் மேலும் அதிகரித்தது.
மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,383க்கும், சவரன் ரூ.584 உயர்ந்து ரூ.27,064க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.35,400க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து ரூ.44.30க்கு விற்பனையாகிறது.
காரணம் என்ன?
சீனா பொருட்களுக்கு புதிய விலை நிர்ணயித்துள்ளது அமெரிக்கா. இதன் தாக்கம் உலக நாடுகள் முழுக்க எதிரொலிப்பதாகவும், அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் தங்கம் விலை உயர்ந்து வருவதாக தங்கம் விற்பனை செய்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை(ஆக.,3) ஆடிப் பெருக்கு கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் தங்கம் விற்பனை, வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும். இந்தச்சூழலில் தங்கம் விலை உயர்ந்து இருப்பது பொதுமக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|