பதிவு செய்த நாள்
06 ஆக2019
11:27

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று(ஆக.,6) சவரன் ரூ.216 உயர்ந்து இருப்பதுடன், ரூ.28 ஆயரத்தையும் நெருங்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1400 உயர்ந்துள்ளது.
சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,487க்கும், சவரன் ரூ.216 உயர்ந்து ரூ.27,896க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.36,440க்கும் விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் 10 காசுகள் குறைந்து ரூ.45.70க்கு விற்பனையாகிறது.
கடந்த ஆக.,1ம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,310ஆக இருந்த தங்கம் விலை இன்று(ஆக.,6) ரூ.3,487ஆக இருக்கிறது. இதன்மூலம் கடந்த ஒருவாரத்தில் மட்டும் ரூ.1,416 உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|