பதிவு செய்த நாள்
09 ஆக2019
00:12

புதுடில்லி:இந்திய பங்குச் சந்தைகள், நேற்று, உயர்வை சந்தித்தன.அன்னிய முதலீட்டாளர்களின், முதலீடுகள் மூலமான வருவாய்க்கு, கூடுதல் சர்சார்ஜ் வசூலிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், அதை, அரசு வாபஸ் பெற்றுக்கொள்ள இருப்பதாக வந்த தகவல்களால், நேற்று பங்குச் சந்தைகள் உயர்ந்தன.’மும்பை பங்குச் சந்தை’ குறியீட்டு எண், ’சென்செக்ஸ்’ 637 புள்ளிகள் உயர்ந்தது. ’தேசிய பங்குச் சந்தை’ குறியீட்டு எண், ’நிப்டி’ 11 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது.வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 636.86 புள்ளிகள் அதிகரித்து, 37,327.36 புள்ளிகளில் நிலைபெற்றது.’நிப்டி’ 176.95 புள்ளிகள் உயர்ந்து, 11,058.05 புள்ளிகளில் நிலைபெற்றது.
எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆற்றல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உள்ள, நிறுவனப் பங்குகள் விலை அதிகரித்ததையடுத்து, சந்தை இத்தகைய உயர்வைக் கண்டது.
எச்.சி.எல்., டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் பேங்க் போன்ற பங்குகள் விலை அதிகரித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|