கண்மூடித்தனமாக கடன் வாங்கும் இந்தியர்கள் : ஆய்வறிக்கை சொல்லும்  அதிர்ச்சி தகவல்கள் கண்மூடித்தனமாக கடன் வாங்கும் இந்தியர்கள் : ஆய்வறிக்கை சொல்லும் ... ...  வரி, ‘ரீபண்ட்’ நிலையை  அறிவது எப்படி வரி, ‘ரீபண்ட்’ நிலையை அறிவது எப்படி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘கேஷ்பேக்’ சலுகைகள் மூலம் பலன் பெறும் வழிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2019
00:04

‘டிஜிட்டல்’ யுகத்தில், எல்லாவிதமான பரிவர்த்தனைகளிலும், இப்போது, ‘கேஷ்பேக்’ சலுகைகள் கவர்ந்திழுக்கின்றன. ‘கிரெடிட் கார்டு’ பயன்பாடு, ‘டிஜிட்டல் வாலெட்’ பரிவர்த்தனை, ‘ஆன்லைன்’ உணவு டெலிவரி என, திரும்பிய இடமெல்லாம், கேஷ்பேக் சலுகைகள் கவர்ந்திழுக்கின்றன. எல்லாம் சரி, கேஷ்பேக் சலுகைகள் உண்மையிலேயே பலன் தருகின்றனவா?


தள்ளுபடி தான்:



கேஷ்பேக் சலுகைகளை சரியாக பயன்படுத்திக்கொள்வது என்பது, நம் கைகளில் தான் இருக்கிறது. இதற்கு முதலில் கேஷ்பேக்கின் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். கேஷ்பேக் என்பது, வாலெட்கள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள், வங்கிகள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க அளிக்கும் தள்ளுபடி சலுகையாகும்.


விற்பனை வலை:




நிறுவனங்களும், விற்பனையாளர்களும், வாடிக்கையாளர்கள் தங்கள் பொருளை வாங்க சலுகை தருவது இயல்பானது. டிஜிட்டல் யுகத்தில் இது கேஷ்பேக் வடிவில் அமைந்துள்ளது. வழக்கமான தள்ளுபடி உத்தியின் நவீன வடிவம் என்பதால், இதை நிறுவனங்களின் மார்கெட்டிங் உத்தியாகவே புரிந்து கொள்ள வேண்டும்.


என்ன பயன்?


நிறுவனங்கள், தங்கள் பொருட்களை வாங்கவைப்பதற்கான வழியாக கேஷ்பேக் அமைந்தாலும், இது வாடிக்கையாளர்களுக்கும் பலன் அளிப்பதை மறுக்க முடியாது. ஆனால், கேஷ்பேக் சலுகை அடிப்படையில் வாங்கும் முடிவு அமைவதை, தவிர்க்க வேண்டும். வாங்க வேண்டிய பொருளுக்கு, கேஷ்பேக் இருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம்.-



மிகை செலவு:




உங்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்பதைவிட, அதன் மூலம் அதிகம் செலவு செய்ய வைக்க துாண்டுவதே நிறுவனங்களின் நோக்கம் ஆகும். எனவே, கேஷ்பேக் சலுகைகளை பயன் படுத்திக் கொள்வதற்காக மிகையாக செலவு செய்வது வீணானது. தேவையான செலவுகளை திட்டமிட்டு, அதற்கேற்ப கேஷ்பேக்கை நாட வேண்டும்.


நிபந்தனைகள் என்ன?



சலுகைகள் ஈர்ப்புடையதாக இருந்தாலும், அவை தொடர்பான பொடி எழுத்து நிபந்தனைகளை கவனிக்க வேண்டும். ஒரு சில சலுகை, முதல் முறை வாங்குவதற்கே பொருந்தலாம். ஒரு சிலவற்றுக்கு, குறைந்த பட்ச தொகை இருக்கலாம். அதே போல, நம்பகமான தளங்கள் அளிக்கும் சலுகையை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)