வரி, ‘ரீபண்ட்’ நிலையை  அறிவது எப்படி வரி, ‘ரீபண்ட்’ நிலையை அறிவது எப்படி ... 3 இன் 1, வீட்டிலேயே சினிமா... : ஜியோவின் அடுத்த அதிரடி 3 இன் 1, வீட்டிலேயே சினிமா... : ஜியோவின் அடுத்த அதிரடி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கமாடிட்டி சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2019
00:11

கச்சா எண்ணெய்சர்­வ­தேச சந்­தை­யில், கச்சா எண்­ணெய் விலை, கடந்த, 4 வாரங்­க­ளாக சரி­வில் வர்த்­த­க­மாகி வரு­கிறது. இருப்­பி­னும், கடந்த வார இறுதி நாட்­களில், விலை உயர்ந்து வர்த்­த­க­மாகி வந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.உல­கின், இரண்­டாம் மிகப்­பெ­ரிய எண்­ணெய் உற்­பத்தி நாடான, சவுதி அரே­பியா, தொடர்ந்து கச்சா எண்­ணெய் விலை சரிந்து வரும் சூழ­லில், விலை சரி­வைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கு­டன், சில முடி­வு­களை எடுத்து வரு­கிறது.குறிப்­பாக, அடுத்த மாதத்­திற்­கான ஏற்­று­மதி மற்­றும் ஏற்­று­மதி ஒப்­பந்­தங்­களை, இந்­நாடு குறைத்து வரு­கிறது.இதன் கார­ண­மாக, சந்­தை­யில் தட்­டுப்­பாடு நில­வும் என்ற அச்­சத்­தில், வார இறுதி நாட்­க­ளான, வியா­ழன் மற்­றும் வெள்ளி தினங்­களில், விலை சற்று உயர்ந்து வர்த்­த­க­மா­கி­யது.ஏப்­ரல் முதல் கடந்த வாரம் வரை, 20 சத­வீ­தத்­துக்­கும் மேல், எண்­ணெய் விலை சரிந்­துள்­ள­தால், கச்சா எண்­ணெய் உற்­பத்தி செய்­யும் நாடு­க­ளின் பொரு­ளா­தா­ரத்­தில் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.


மேலும், பல சுத்­தி­க­ரிப்பு எண்­ணெய் நிறு­வ­னங்­கள் நஷ்­டத்­தில் இயங்கி வரு­வ­தா­க­வும், விலை சரிவை கட்­டுக்­குள் கொண்­டு­வர வேண்­டும் என்­றும், அனைத்து எண்­ணெய் உற்­பத்தி நாடு­களும் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.‘ஒபெக்’ எனும், கச்சா எண்­னெய் உற்­பத்தி நாடு­க­ளின் கூட்­ட­மைப்­பின் சந்­திப்பு, அடுத்த மாதம், 12ம் தேதி, துபா­யில் நடை­பெற உள்­ளது.இதில், ஏற்­க­னவே செய்­யப்­பட்­டுள்ள ஒப்­பந்­தப்­படி, உறுப்பு நாடு­கள், தங்­க­ளது உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்­கையை சரி­யாக பின்­பற்றி வரு­கின்­ற­னவா என்­பது பற்றி ஆரா­யப்­படும்.மேலும், விலை ஏற்­றப் போக்­கினை கட்­டுக்­குள் கொண்­டு­வர, உற்­பத்­திக் குறைப்பை மேலும் அதி­க­ரிக்­க­லாம் என்ற கருத்­தும் நிலவி வரு­கிறது.இது­போன்ற கார­ணங்­க­ளால், இந்த கூட்­டம் மிக முக்­கி­ய­மா­ன­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.


சவுதி அரே­பி­யா­வின் தின­சரி எண்­ணெய் உற்­பத்தி, ஜூலை மாதத்­தில், 9.7 மில்­லி­யன் பேரல்­கள் ஆக இருந்­தது. இது அதன் உற்­பத்தி இலக்­கைக் காட்­டி­லும் குறை­வா­கும்.மேலும், ஒட்­டு­மொத்த, ஒபெக் உறுப்பு நாடு­க­ளின் உற்­பத்­தி­யும், ஜூலை மாதத்­தில், ஐந்து வருட குறை­வில் இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.இருப்­பி­னும், தற்­போது ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார மந்த சூழல் கார­ண­மாக, கச்சா எண்­ணெய் தேவை­யில் ஏற்­பட்­டுள்ள தொய்வு கார­ண­மாக, விலை உய­ரா­மல், கடந்த சில வாரங்­க­ளாக சரிந்து வரு­கிறது. இதற்கு, அதி­க­ரித்து வரும், அமெ­ரிக்­கா­வின் உற்­பத்­தி­யும், ஒரு முக்­கிய கார­ண­மா­கும்.தங்கம் வெள்ளி

சர்­வ­தேச சந்­தை­யில், கடந்த வாரம், தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை, தலா, 5 சத­வீ­தம் உயர்ந்து வர்த்­த­கம் ஆனது. மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பின் ஏற்­பட்ட அதி­கப்­ப­டி­யான, வார அள­வி­லான, விலை உயர்வு இது­வே­யா­கும்.


அமெ­ரிக்க மத்­திய வங்கி, கடந்த மாத இறு­தி­யில், 10 ஆண்­டு­க­ளுக்­குப் பின், வட்டி விகி­தத்தை முதன்­மு­றை­யா­கக் குறைத்­தது. இதற்கு, பொரு­ளா­தார வளர்ச்சி குறைவே கார­ண­மா­கும்.
ஆசி­யா­வைப் பொருத்­த­வரை, நியூ­சி­லாந்து, தாய்­லாந்து, இந்­தியா ஆகிய நாடு­களும், இந்த ஆண்­டில், வட்டி விகி­தத்தை குறைத்­தது குறிப்­பி­டத்­தக்­கது.


இவ்­வா­றாக, வட்டி விகி­தங்­கள் குறைக்­கப்­படும் போது, அரசு கரு­வூ­லங்­களில் செய்த முத­லீ­டு­க­ளுக்­கான ஆதா­யம் குறை­யும். அதன்­படி, பெரும்­பா­லான நாடு­களில், நீண்­ட­கால கரு­வூல ஆதா­யங்­கள் குறைந்து வரு­வ­தால், முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில் பெரும் அச்­சம் ஏற்­பட்­டுள்­ளது. எனவே, இதற்கு மாற்­றாக, பாது­காப்பு கருதி, தங்­கம் மீதான முத­லீடு அதி­க­ரித்து வரு­கிறது.
முன்­னர் குறிப்­பிட்­டி­ருந்­தது போலவே, வட்டி விகி­த­மும், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­யும் எதிர்­ம­றை­யான போக்­கினை கொண்­ட­தா­கும்.
அதா­வது, வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­டும்­போது, அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு சரிவு கார­ண­மாக, கமா­டிட்டி பொருட்­கள் விலை உய­ரும்.இதன்­படி, ஜூன் மாதம் முதல், தங்­கம் உள்­ளிட்­ட­வற்­றில், விலை ஏற்­றம் காணப்­ப­டு­கிறது.நடப்பு ஆகஸ்ட் மாதத்­தில், இது­வரை, ஓர் அவுன்ஸ் தங்­கம், சுமார், 115 அமெ­ரிக்க டாலர் அள­வுக்கு உயர்ந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. ஓர் அவுன்ஸ் என்­பது, 31.104 கிராம் ஆகும்.மேலும், உல­கின் மிகப்­பெ­ரிய நாடு­க­ளான அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் தொடர்ந்து வர்த்­தக மோத­லில் ஈடு­பட்டு வரு­கின்­றன. இதன் கார­ண­மாக, பொரு­ளா­தார வளர்ச்சி மேலும் குறை­யும் என்ற அச்­சத்­தி­னா­லும், பாது­காப்பு கரு­தி­யும், தங்­கம் மீதான முத­லீடு அதி­க­ரித்து வரு­கிறது.உள்­நாட்­டில், ஆப­ர­ணத் தங்­கத்­தின் விலை, சர்­வ­தேச சந்­தை­யைக் காட்­டி­லும் உயர்ந்து வரு­வ­தற்கு, டால­ருக்கு நிக­ரான, இந்­திய ரூபா­யின் மதிப்பு கடு­மை­யாக சரிந்து வரு­வது ஒரு கார­ண­மா­கும்.தற்­போது, ஓர் அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, சுமார், 70 ரூபாய் என்ற நிலை­யில், மேலும் மதிப்பு சரிவு ஏற்­பட்டு, உள்­நாட்டு சந்­தை­யில், ஆப­ர­ணத் தங்­கத்­தின் விலை, மீண்­டும் உய­ரும் போக்கே காணப்­ப­டு­கிறது.


செம்புஇந்த ஆண்­டின் பெரும்­பா­லான நாட்­களில், தொடர் சரி­வில் வர்த்­த­க­மாகி வந்த செம்பு விலை, கடந்த வாரம், சற்று அதி­க­ரித்து, வர்த்­த­க­மாகி முடி­வுற்­றது. தற்­போ­தைய சூழ­லில், அமெ­ரிக்கா மற்­றும் சீனா ஆகிய நாடு­க­ளுக்கு இடையே நடந்­து­வ­ரும் வர்த்­தக மோதல் கார­ண­மாக, பொரு­ளா­தார வளர்ச்சி பாதிக்­கப்­படும் என்­ப­தால், தேவை குறைந்து, விலை உயர்வு கட்­டுக்­குள் வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.


உலக அள­வில், செம்பு நுகர்­வில், சீனா முத­லி­டம் வகிக்­கிறது. ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் கார்­க­ளுக்கு, அதி­கப்­ப­டி­யான வரி விதிக்­கப்­படும் என்று, அமெ­ரிக்கா அறி­வித்­தி­ருந்­தது. இதன் பின் ஏற்­பட்ட பேச்­சு­களில், வரி அதி­க­ரிப்பை விலக்­கிக்­கொள்­வ­தான போக்கு நிலவி வரும் சூழ­லில், செம்பு விலை ஏற்­றம் கண்­டது.


இருப்­பி­னும், லண்­டன் பொருள் வர்த்­தக சந்­தை­யில், செம்பு இருப்பு அதி­க­ரித்து வரு­வ­தால் விலை ஏற்­றம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
மும்பை:நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 11 சதவீதமாக இருக்கும் என, ... மேலும்
business news
புதுடில்லி:மின்னணு வர்த்தக கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, ... மேலும்
business news
புதுடில்லி:அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா, உலகளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்றும்; நாட்டின் ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் நல்ல ஏற்றத்துடன் துவங்கின. சென்செக்ஸ் 300 ... மேலும்
business news
மிகப்பெரிய முதலீடாக அமையும் சொந்த வீடு வாங்குவதை தீர்மானிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)