வரி, ‘ரீபண்ட்’ நிலையை  அறிவது எப்படி வரி, ‘ரீபண்ட்’ நிலையை அறிவது எப்படி ... 3 இன் 1, வீட்டிலேயே சினிமா... : ஜியோவின் அடுத்த அதிரடி 3 இன் 1, வீட்டிலேயே சினிமா... : ஜியோவின் அடுத்த அதிரடி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தீர்வு தருமா நிதி அமைச்சர் பயணம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2019
00:17

முதலில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததைப் பார்த்துவிடுவோம். இந்திய பொருளாதாரத்தின் பல்வேறு முகங்கள் ஒரேச மயத்தில் அவரது வாசல் கதவைத் தட்டிய நாள் அது.



காலையில், இந்திய தொழில் துறையைச் சேர்ந்த பல மூத்தவர்கள், அமைச்சரை சந்தித்தனர். கடந்த மாதம், ’கபே காபி டே’ நிறுவனர், வி.ஜி.சித்தார்த்தா அடைந்த துர்மரணத்தைப் பற்றியும், வருமான வரித் துறையினரின் கெடுபிடிகளைப் பற்றியும் அவர்கள் பேசினர். இந்தியாவில் தொழில் செய்வதில் உள்ள பல்வேறு சிரமங்களையே, சித்தார்த்தாவின் மரணம் எடுத்துச் சொல்வதாக தொழிலதிபர்கள் கருதுகின்றனர். அதில், வருமான வரித் துறையினர் இன்னும் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.



கூட்டத்துக்குப் பின் வெளியே வந்து பேசிய அதி கோத்ரெஜ், “இங்கே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொருளாதாரம் சரிந்துவிட்டது.‘‘இந்தப் பொருளாதாரத்தை துாக்கி நிறுத்த, பட்ஜெட்டில் பெரும் திட்டங்கள் ஏதும் இல்லை... அரசாங்கம் ஏதேனும் செய்தால் நல்லதாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.மதியத்துக்கு மேல், இன்னொரு கூட்டம். அதில், 20 இந்திய முதலீட்டாளர்களும், 18 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் பங்கேற்றன.



வெளிநாட்டு முதலீடுகள், ஆண்டொன்றுக்கு, 2 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டினால், அதன் மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக பட்ஜெட்டில் தெரிவித்து இருந்தார், நிதியமைச்சர்.இதனால், பல நிறுவனங்கள் கடுப்பாகிவிட்டன. ஜூலை மாதத்தில் மட்டும் சுமார், 1.8 பில்லியன் டாலர் அளவுக்கு தங்கள் முதலீடுகளை பங்குச் சந்தைகளில் இருந்தும் இதர சந்தைகளில் இருந்தும் எடுத்துக் கொண்டன.வரி சீர்திருத்தம் தொடர்பான இவர்களது கோரிக்கைகளை காதுகொடுத்துக் கேட்ட நிதியமைச்சர், எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை.



இதேநேரம் மும்பையில் ஓர் அறிவிப்பு. மகிந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் சந்தையில் தேங்கிப் போய்விட்டன. வேறு வழியில்லாமல், ஒவ்வொரு மாதமும், 8 முதல் 14 நாட்கள் வரை தங்களுடைய உற்பத்தியைக் குறைத்துவிடப் போவதாக அறிவித்தது மகிந்திரா.மாலையில் மற்றொரு செய்தி. ஜூன் மாதத்துக்கான இந்திய தொழில் உற்பத்தி குறியீடு எனப்படும் ஐ.ஐ.பி., மதிப்பீடுகள் வெளியாயின.



ஜூன் மாதத்தில், உற்பத்தித் துறை, சுரங்கத் துறை, மின்சார உற்பத்தி ஆகியவற்றில் முறையே, 1.2 சதவீதம், 1.6 சதவீதம், மற்றும் 8.2 சதவீதம் சரிவு காணப்பட்டன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தோடு ஒப்பிடும்போது, இந்த ஜூன் மாதத் தொழில் உற்பத்திக் குறியீடு, 2 சதவீதமாக சரிவு கண்டுள்ளது.இதனிடையே சிறு, குறு, நடுத்தர தொழில்களைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கான நிதி ஆதாரங்களை அதிகப்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.



குறிப்பாக, அரசாங்கம் தரவேண்டிய, 46 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விரைந்து தாருங்கள் என்றனர்.இவையெல்லாம் ஒரு விஷயத்தைத் தான் சொல்கின்றன. தொழில் துறை மட்டுமல்ல, சேவைத் துறையைச் சேர்ந்தவர்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.‘ரெப்போ’ விகிதத்தை, 0.35 சதவீதம் குறைத்தபோது, நிதிக் கொள்கை குழு ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டியது.




அதாவது, இங்கே சுணங்கிப் போயிருக்கும், தனியார் முதலீட்டை உயர்த்துவது ஒன்றே தங்களுடைய நோக்கம் என்று தெரிவித்தார் சக்திகாந்த தாஸ். அதற்காக, வட்டிவிகித குறைப்பின் பலனை, பொதுமக்களுக்கும், தொழில் துறையினருக்கும் வங்கிகள் விரைந்து வழங்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும் போது, இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்துறையினரின் நிலைமை மெச்சத் தகுந்ததாக இல்லை. பெரிய பெரிய நிறுவனங்களே திணறுவதாகச் செய்திகள் கசிகின்றன.




இதையெல்லாம் புரிந்துகொள்வதற்காக, நிதி அமைச்சர் ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்து உள்ளார். இந்த வாரம் முதல், பல்வேறு நகரங்களுக்கு அவரே சென்று, அங்குள்ள தொழில் துறை அதிபர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.அவர்கள் ஏதேனும் வரி வன்முறைகளை எதிர்கொண்டார்களா என்பதை அறிந்துகொண்டு, அங்கேயே அதற்குத் தீர்வு காணப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.வரவேற்கத்தக்க பயணம் இது.


அமைச்சர் நேரடியாக தொழில் துறையினரைச் சந்திக்கும்போது, ஏராளமான விஷயங்கள் தெரியவரும். ஒவ்வொரு தொழில் பிரிவினரும் சந்திக்கும் சவால்களையும் சிரமங்களையும் உணர முடியும்.பொதுவாக தொழில், பொருளாதாரச் சரிவுகள் என்பவை, ஒற்றைக் காரணத் தால் ஏற்படுவதில்லை. சர்வதேச, உள்ளூர், கொள்கை மற்றும் நடைமுறை சிக்கல்களால் ஏற்படுவதே இத்தகைய இடர்கள்.



எந்த ஆட்சி நடந்தாலும், இத்தகைய சரிவுகள் ஏற்படவே செய்யும்.அதை மூடி மறைக்காமல், வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, அதற்கான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். மாற்று வழிகளை காண வேண்டும். இன்று அரசாங்கத்தின் உதவி பல துறையினருக்குத் தேவையாக இருக்கிறது. அதை உரியவர்களுக்கு வழங்கவும் இப்பயணம் நிச்சயம் உதவும் என்று நம்புவோம்.


ஆர்.வெங்கடேஷ்


pattamvenkatesh@gmail.com

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)