வரி, ‘ரீபண்ட்’ நிலையை  அறிவது எப்படி வரி, ‘ரீபண்ட்’ நிலையை அறிவது எப்படி ... நாட்டின் தங்கம் இறக்குமதி 35.5 சதவீதம் அதிகரிப்பு நாட்டின் தங்கம் இறக்குமதி 35.5 சதவீதம் அதிகரிப்பு ...
3 இன் 1, வீட்டிலேயே சினிமா... : ஜியோவின் அடுத்த அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2019
12:55

மும்பை : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக ஒரே இணைப்பில் மொபைல், டிவி, இன்டர்நெட் என அனைத்து வசதிகளையும் பெறும் ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் திட்டத்தை செப்டம்பர் 5 முதல் துவங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42 வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் இன்று (ஆக.,12) நடைபெற்றது. இதில் பேசிய முகேஷ் அம்பானி, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நெட்வொர்க் என்ற பெருமையை ஜியோ பெற்றுள்ளது. ஜியோ 340 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஏற்றுமதி நெட்வொர்க் நிறுவனம் என்ற பெயரை ஜியோ பெற்றுள்ளது. எண்ணெய் வர்த்தக துறையில் சவுதி அரேபியா அரசு நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம் போட்டுள்ளது என்றார்.

ஜிகா பைபர் பிராட்பேண்ட் சிறப்பம்சங்கள்

* ஹோம் பிராட்பேண்ட் சேவை இணைப்பு அறிமுகம்

* டிவி மூலமாகவே உலகின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் வீடியோ கால் பேசலாம்.

* ஜியோ பைபரில் இணையதள வேகம் நொடிக்கு 1 ஜிபி.,யாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* ஆன்லைன் ஷாப்பிங் முறையில் விர்ச்சுவலாக உடைகளை அணிந்து தேர்வு செய்யலாம்.

* ஜியோ செட்டாப் பாக்ஸ் மூலம் இந்தியாவின் முதல் மல்டிபிளேயர் ஆன்லைன் நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படுகிறது.

* ஜியோ பைபர் செப்.,5 முதல் அறிமுகம்

* ஜியோ பைபர் தொடக்க சலுகையாக 4 K TV மற்றும் செட் டாப் பாக்ஸ் இலவசம். ஆயுட்கால சந்தாதாரராக இணைபவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது.

* தியேட்டர்களில் ஒரு சினிமா ரிலீசாகும் அதே நேரம் உங்கள் வீட்டில் இருந்தே ஜியோ பைபர் மூலம் அதே சினிமா பார்க்கலாம். இதை ஜியோ முதல்நாள் முதல் காட்சி என்று அழைக்கிறோம். இத்திட்டம் வரும் 2020 ம் ஆண்டு முதல் அறிமுகம்.

* ஜியோ பைபர் சேவை மாதம் ரூ.700 முதல் 10,000 வரை சந்தா தொகையாகும்.

* ஹோம் பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு வாய்ஸ்கால் முற்றிலும் இலவசம். நொடிக்கு 100 எம்.பி., இணையவேகத்தில் ஜியோ பைபரின் திட்டம் உள்ளது.

* இந்தியாவின் முதல் மல்டிபிளேயர் ஆன்லைன் நெட்வொர்க் தொடங்கப்பட்டுள்ளது.

* காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு சிறப்பு சலுகை வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : கடந்த சில தினங்களாக சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்த வந்த தங்கம் விலை இன்று(ஆக.,24) ஒரே நாளில் ... மேலும்
business news
சென்னை, ஆக. 24–போலியாக, ஜி.எஸ்.டி., பில் தயாரித்து மோசடி செய்தது தொடர்பாக, சென்னையில், கடந்த நான்கு மாதங்களில், ... மேலும்
business news
சென்னை, ஆக. 24–பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து, அனைத்து பொதுத் துறை வங்கிகளும், அவற்றின் வங்கி கிளைகளின் ... மேலும்
business news
மும்பை: அண்மைக் காலத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த, ‘கியா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின், ... மேலும்
business news
சிறு துளி ஆகஸ்ட் 12,2019
ஏர் இந்தியா பாக்கிஏர் இந்தியா நிறுவனம் எரிபொருள் வகைக்கு, 4,500 கோடி ரூபாய் கடன் வைத்திருப்பதாகவும், 90 நாட்களில் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
ram -  ( Posted via: Dinamalar Android App )
17-ஆக-201904:22:45 IST Report Abuse
ram தவறுகளுக்கு மேல் தவறுகள் செய்கின்றனர். இதனால் பலன்கள் மோசமாகத்தான் இருக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)