டி.ஜே.ஐ., மொபைல் 3 கிம்பல் டி.ஜே.ஐ., மொபைல் 3 கிம்பல் ...  அசாதாரண நடவடிக்கை தேவை! அசாதாரண நடவடிக்கை தேவை! ...
அரசிடம் என்ன எதிர்பார்க்கலாம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
04:06

தொழில் மற்றும் வர்த்தக உலகில், பொருளாதார தேக்கம் விலக, அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து, பெரும் எதிர்பார்ப்புகள் தெரிகின்றன.பொருளாதார தொய்வு, தேக்கமாக மாறிவிடக்கூடாது என்பதே அனைவரின் கவலை. அப்படி நடக்காமல் இருக்க, துரிதமான, கனமான பொருளாதார முடிவுகள் தேவை.
அந்த முடிவுகள் மிக வேகமாக எடுக்கப்பட வேண்டும் என்ற, பொதுவான எதிர்பார்ப்பில் நியாயம் இருக்கிறது.அரசின் பொருளாதார முடிவுகள், மக்கள் மத்தியில், மனநிலை மாற்றம் உருவாக உதவுவதாக இருக்க வேண்டும். புதிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஊட்டும் வண்ணம், அரசின் முடிவுகள் இருக்க வேண்டியது அவசியம்.என்ன செய்தால் தற்போதைய சூழல் மாறும் என்ற கணிப்பு இன்னும் உருவாகவில்லை என்றே தோன்றுகிறது.
கடன் வசதிஅதனால் தானோ என்னவோ, ஒவ்வொரு துறையும் தனித்துவமான தனது தேவைகளையே முன்வைத்து, நாட்டின் பொதுவான தேவைகளை முன்வைக்க தவறுகிறது.இந்தச் சூழலில், அரசு எல்லா தரப்புகளிடமும் நிதானமாக கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில், அரசு தன் நிலைப்பாட்டையும், நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்தும். அரசின் அறிவிப்புகள் எப்படி வரவேற்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே, அந்த முடிவுகளின் உடனடி தாக்கத்தை அளவிட முடியும். அதற்கு அனைவரும் காத்திருக்கின்றனர்.அரசிடம் நாம் குறைந்தபட்சமாக என்ன எதிர்பார்க்கலாம்?அரசு, கொள்கை ரீதியான மாற்றங்களை கொண்டு வர, அவசரம் காட்ட வேண்டும். அந்த மாற்றம், தொழில் மற்றும் வர்த்தக உலகில், தேவையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.வங்கிகள், தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு தேவையான கடன் வசதிகளை கொடுக்க முன் வரலாம்.
இதனால், நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கிய குறு, சிறு தொழில்கள் இனி, வங்கி சார்ந்த இயக்கத்திற்கு மாறலாம்.அவகாசம்நிதி நிறுவன முடக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு, இதனால் விலகலாம். ரிசர்வ் வங்கியால் குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள், வாடிக்கையாளர்களை சென்று அடைய, பொதுத்துறை வங்கிகளை அரசு நிர்ப்பந்திக்கலாம்.இதனால், ஒட்டுமொத்த பொருளாதாரமும் வளர்ச்சி பெறலாம். பல நிறுவனங்களின் நிதி செலவு குறையும். இதனால், அவர்களின் தொழில் மேம்படத் தேவையான செலவுகளை, இந்த சேமிப்புகளை கொண்டு செய்து முடிக்க முடியும்.ஏற்கனவே, தொழில் சிரமங்களில் சிக்கி இருக்கும் நல்ல வாடிக்கையாளர்களுக்கு, கடனின் அசலை திருப்பிக் கொடுக்க, பொதுத்துறை வங்கிகள், அவர்களுக்கு அதிக கால அவகாசம் தரலாம்.ஒருமித்த கருத்துஅரசு வங்கிகள், கொடுக்கும் வாகன கடன்களை அதிகரிக்கலாம்.
இதனால், குவிந்து கிடக்கும் வாகன கணக்கு வேகமாக குறையும். மீண்டும் வாகன உற்பத்தி வளர இது மட்டுமே வழிவகுக்கும்.பொருளாதாரத்தில் மேலும் கடன் வளர்ச்சி பெருக, அரசு பொதுத்துறை வங்கிகளை ஊக்குவிக்கலாம். வருமான வரி சார்ந்த மாற்றங்களை குறுகிய காலகட்டத்திற்கு கொண்டு வரலாம்.
குறிப்பிட்ட பயனாளிகளுக்கு வரிச் சலுகைகள் கொடுத்து, அவர்கள் தைரியமாக முதலீடுகள் செய்ய ஊக்குவிக்கலாம்.நிறுவன நம்பிக்கையும், நுகர்வு நம்பிக்கையும் வளரும் வகையில், அரசால் எடுக்கப்படும் முடிவுகள் விரைந்து உதவ வேண்டும். இதில், அனைவர் மத்தியிலும் ஒருமித்த கருத்து தெளிவாக தெரிகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் விலை இதுவரை காணாத விலை உச்சமாக, கிராம் ரூ.4 ஆயிரமும், சவரன் ரூ.32 ஆயிரத்தையும் தாண்டியது.சென்னை ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜனவரி மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாக, வாகன முகவர்கள் ... மேலும்
business news
புதுடில்லி : மொபைல் போன் மீதான, ஜி.எஸ்.டி.,யை அதிகரிப்பதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என, முக்கியமான அனைத்து ... மேலும்
business news
சென்னை : எல்., அண்டு டி., குழுமம், அதன் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் விதமாக, சென்னையில் உள்ள அதன் ... மேலும்
business news
புதுடில்லி : ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீடு, மார்ச் 2ம் தேதி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)