பதிவு செய்த நாள்
21 ஆக2019
05:54

மும்பை: கடந்த ஆண்டில், அரசு அறிவித்த, ‘59நிமிடங்களில் கடன்’ திட்டம் குறித்து, சிறு வணிக உரிமையாளர்கள் ஆர்வமாக இல்லை என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர், ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ரூ.25 கோடி விற்றுமுதல் கொண்ட வணிகத்தை நடத்தும் ஒரு தொழிலதிபர், 5 கோடி ரூபாயை, ‘59 நிமிடங்களில் கடன்’ திட்டம் மூலம் எளிதாகப் பெற முடியும். திட்டம் அருமையாக இருந்தும், இதுகுறித்து, போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை. இதனால், இந்த திட்டத்தை விரிவுபடுத்தி, வாகனங்கள் வாங்குவதற்கு, குறிப்பாக, கார் வாங்குபவர்களுக்கு வழங்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த செய்திகளின் படி, ‘59 நிமிடங்களில் கடன்’ திட்டம் அறிமுகம் ஆனதிலிருந்து இதுவரை, 50 ஆயிரத்து, 706 விண்ணப்பங்களுக்கு கொள்கை ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் இறுதி நிலவரப்படி, இதுவரை, 27 ஆயிரத்து, 893 விண்ணப்பங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுத் துறை வங்கிகள் இணைந்து, ‘பி.எஸ்.பி., லோன்ஸ் இன் 59 மினிட்ஸ்’ எனும், புதிய இணைய தள வசதியை அறிமுகம் செய்ய இருக்கின்றன. இந்த தளத்தின் மூலம், வீடு, வாகன கடன்களை வழங்க, பொதுத் துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|