பதிவு செய்த நாள்
24 ஆக2019
03:04
மும்பை: அண்மைக் காலத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த, ‘கியா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின், ‘செல்டாஸ்’ கார், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் அதன் முதல் அறிமுகமாக, செல்டாஸ் எஸ்.யு.வி., காரை அறிமுகம் செய்துள்ளது.இந்த காருக்கான முன்பதிவை அறிவித்ததை அடுத்து, 32 ஆயிரத்து, 35 பேர் முன்பதிவு செய்தனர். இதிலிருந்தே, இந்த காருக்கான எதிர்பார்ப்பை அறிந்து கொள்ளலாம். தற்போது செல்டாஸ் கார், ‘டெக் லைன்’ மற்றும் ‘ஜி.டி., லைன்’ என, இரண்டு விதமான மாடல்களில் வந்துள்ளது.
பெட்ரோல், டர்போ பெட்ரோல், டீசல் என, மூன்று ரகங்களில் கிடைக்கிறது. மேலும், ‘ஆட்டோமேட்டிக் கியர்’ வசதியுடன் வந்திருக்கிறது. 360 டிகிரி கேமரா, முன்புற, பக்கவாட்டு ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், பிளைண்டு ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஏ.பி.எஸ்., பிரேக்கிங் சிஸ்டம் என, பாதுகாப்பு அம்சங்களிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இந்த காரின் அறிமுக விலை, 9.69 லட்சம் ரூபாய் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|