அமலுக்கு வரும் வருமான வரி மாற்றம்அமலுக்கு வரும் வருமான வரி மாற்றம் ... தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்தது:ஆகஸ்ட் மாதத்தில் 15 மாதங்களில் இல்லாத சரிவு தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்தது:ஆகஸ்ட் மாதத்தில் 15 மாதங்களில் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பொரு­ளா­தார மந்த நிலை நிதி நி­லையை பாது­காப்­பது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2019
23:56

பொருளாதாரத்தில் மந்தமான போக்கு நிலவும் சூழலில், சராசரி முதலீட்டாளர்கள் தங்கள் நிதிநிலையை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகள்.
பொரு­ளா­தார சவால்­கள் தவிர்க்க முடி­யா­தவை. இந்­திய பொரு­ளா­தா­ர­மும் தற்­போது வளர்ச்சி நோக்­கில் சவா­லான சூழலை எதிர்­நோக்­கி­ உள்­ளது. தொழில் தேக்­கம் உள்­ளிட்ட பொரு­ளா­தார மந்த நிலைக்­கான கார­ணங்­கள், வல்­லு­னர்­க­ளால் அலசி ஆரா­யப்­பட்டு வரு­கின்றன.

இத­னி­டையே, பொரு­ளா­தா­ரத்தை ஊக்­கு­விக்­கும் வகை­யில் மத்­திய நிதி அமைச்­சர் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை அறி­வித்­தி­ருக்­கி­றார். இந்த நட­வ­டிக்­கை­களை இந்­திய தொழில்­ து­றை­யும் வர­வேற்­றுள்­ளது. எனி­னும், எந்த ஒரு பொரு­ளா­தார நெருக்­க­டி­யும், தனி­ந­பர்­கள் மீதும் தாக்­கம் செலுத்­தும். அந்­த­ வ­கை­யில், மந்­த­மான பொரு­ளா­தார சூழ­லில், தனி­ந­பர்­கள் தங்­கள் நிதி நிலை அதி­கம் பாதிக்­கப்­ப­டா­மல் தற்­காத்­துக்­கொள்­வ­தற்­கான வழி­களை பின்­பற்ற வேண்­டும்.

செலவு கட்­டுப்­பாடு

பொரு­ளா­தார சூழலோ, அது, நிதி நிலை மீது தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதோ நம் கைகளில் இல்லை. ஆனால், நிச்­ச­யம் செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­து­வது நம் கைகளில் இருக்­கிறது. வரு­மா­னம் குறைவு, வேலை இழப்பு போன்ற செய்­தி­கள் வெளி­யாகும் சூழ­லில், தேவை­யில்­லாத செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­து­வதில் நிதி நிலை மீதான பாதிப்பை குறைக்க உத­வும். செல­வு­களை அலசி ஆராய்ந்து, தவிர்க்க கூடிய செல­வுகளை குறைத்­துக்­கொள்­ள­லாம்.


உதா­ர­ண­மாக, அடிக்­கடி வெளியே சாப்­பி­டும் பழக்­கம் கொண்­ட­வர்­கள் அதை குறைக்­க­லாம்.செலவை குறைக்­கும் அதே நேரத்­தில், முத­லீ­டு­களை விடா­மல் தொடர்­வது முக்­கி­யம் என்­பதை உணர வேண்­டும். அதி­லும், சிக்­க­லான சந்தை சூழ­லில் முத­லீ­டு­கள் எதிர்­பார்த்த பலனை தரா­மல் போக­லாம். உதா­ர­ண­மாக, மியூச்­சு­வல் பண்ட் திட்­டங்­கள் சில எதிர்­மறை பலனை அளிப்­ப­தாக கூறப்­ப­டு­கின்றன. ஆனால், அதற்­காக முத­லீட்டை நிறுத்­தக்­கூ­டாது. சந்­தை­யின் ஏற்ற இறக்­க­மான போக்கு, முத­லீட்டை தீர்­மா­னிக்க அனு­ம­திக்­கா­மல் இருப்­பதே நல்­லது;

ஒரு­வ­ரின் நிதி இலக்­கு­களே முக்­கி­யம். அதி­லும் குறிப்­பாக, மியூச்­சு­வல் பண்ட்­களில், எஸ்.ஐ.பி., எனப்­படும் சீரான முத­லீட்டு முறையை தேர்வு செய்­துள்­ள­வர்­கள் அதை தொடர வேண்­டும். சரி­யும் சந்­தை­யில், அதிக யூனிட்­களை வாங்க முடி­யும் என்­பது இதற்கு முக்­கிய கார­ணம்.பாது­காப்பு கருதி முத­லீட்டை பர­வ­லாக்கி கொள்­வ­தும் ஏற்­ற­தாக இருக்­கும். பொரு­ளா­தார தேக்க நிலை சூழ­லில், தங்­கம் அதிக பயன் அளிக்­கும் முத­லீடு. தற்­போது அதற்­கேற்ப தங்­கத்­தின் விலை உயர்ந்து வரு­கிறது.

அவ­சர கால நிதி

எனவே, தங்க முத­லீட்டை நாட­லாம். மொத்த முத­லீட்டு தொகுப்­பில் தங்­கம், 10 முதல், 15சத­வீ­தம் இருப்­பது நல்­லது. ஆனால், நகை வடி­வில் வாங்­கு­வ­தை­விட, தங்க சேமிப்பு பத்­தி­ரம், தங்க இ.டி.எப்., போன்ற காகித வடிவ முத­லீடு ஏற்­ற­தாக இருக்­கும்.அதே போல, எதிர்­பா­ராத செல­வு­களை சமா­ளிப்­ப­தற்­கான அவ­சர கால நிதி கையில் இருப்­பதை உறுதி செய்து கொள்ள வேண்­டும்.


பொது­வாக, நிதி திட்­ட­மி­ட­லில் அவ­சர கால நிதி முதன்­மை­யாக வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது. ஒற்றை வரு­மா­னம் கொண்ட குடும்­பங்­க­ளுக்கு இது இன்­னும் முக்­கி­யம். பொது­வாக, ஆறு மாத கால அடிப்­படை செல­விற்­கான தொகை அவ­சர கால நிதி­யாக இருக்க வேண்­டும் என சொல்­லப்­ப­டு­கிறது. ஏற்­க­னவே, இந்த நிதியை உரு­வாக்­கி­யி­ருக்­க­வில்லை எனில், முத­லில் இதை உரு­வாக்கி கொள்ள வேண்­டும். லிக்­விட் பண்ட் போன்­றவற்­றில், இதை போட்டு வைக்­க­லாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)