அமலுக்கு வரும் வருமான வரி மாற்றம்அமலுக்கு வரும் வருமான வரி மாற்றம் ... தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்தது:ஆகஸ்ட் மாதத்தில் 15 மாதங்களில் இல்லாத சரிவு தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்தது:ஆகஸ்ட் மாதத்தில் 15 மாதங்களில் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கமாடிட்டி சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2019
00:05

கச்சா எண்ணெய்

கச்சா எண்­ணெய் விலை, சர்­வ­தேச சந்­தை­யில், கடந்த இரண்டு மாதங்­க­ளாக சரிந்து, வர்த்­த­க­மாகி வரு­கிறது. கடந்த மாதம், 1 பேரல், 50 டாலர் என்ற நிலை­யில் சரிந்து வர்த்­த­கம் ஆனது. இருப்­பி­னும், தற்­போது, சரி­வில் இருந்து மீண்டு, வர்த்­த­க­மாகி வரு­கிறது.

ஜூலை மாத இறு­தி­யில், சீன பொருட்­களின் இறக்­கு­ம­திக்கு, அமெ­ரிக்கா கூடு­த­லான இறக்­கு­மதி வரியை அறி­வித்­தது. இது, மீண்­டும் இரு நாடு­க­ளுக்கு இடையே வர்த்­தக மோதலை துாண்டு­வ­தாக அமைந்­தது.பின், டிசம்­பர் மாதம், 15ம் தேதி வரை இறக்­கு­மதி செய்­யப்­படும் சில பொருட்­க­ளுக்கு, கூடு­த­லான வரி விதிப்பை அமல்­ப­டுத்­தப் போவ­தில்லை என்று அமெ­ரிக்க அதி­பர் அறி­வித்­தார். தற்­போது, இரு நாடு­க­ளுக்கு இடையே பேச்சு துவங்­கும் என்ற எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது.


இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கா­வின், புளோ­ரிடா மாகா­ணத்­தில், சூறா­வளி காற்று ஏற்­பட வாய்ப்பு உள்­ளது என்ற சூழல் கார­ண­மாக, அங்கு சுத்­தி­க­ரிப்பு மற்­றும் உற்­பத்தி பாதிக்­கப்­படும் என்ற கருத்­தால். கச்சா எண்­ணெய் விலை சரிந்­தது. கடந்த வார இறுதி நாளான வெள்­ளி­யன்று, 3 சத­வீ­தத்­துக்கு மேல் கச்சா எண்­ணெய் விலை சரிந்­தது.


அமெ­ரிக்­கா­வின் கச்சா எண்­ணெய் உற்­பத்தி, தொடர்ந்து உயர்ந்து வந்த சூழ­லில், கடந்த ஜூன் மாதத்­தில், தின­சரி உற்­பத்­தி­யா­னது சரிந்­தது. மேலும், ஆழ்­கு­ழாய் கிண­று­களின் எண்­ணிக்­கை­யும் முந்­தைய வாரத்தை காட்­டி­லும் குறைந்து, 742 என்­றாகி உள்­ளது.‘ராய்ட்­டர்ஸ்’ நிறு­வ­னத்­தின் கருத்­துக் கணிப்­பின்­படி, ‘ஒபெக்’ எனும், எண்­ணெய் உற்­பத்தி நாடு­களின் மொத்த உற்­பத்தி, ஆகஸ்ட் மாதத்­தில் உயர்ந்­துள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது. இது, இந்த ஆண்­டின் முதல் மாத உயர்­வா­கும்.

ஒபெக் உறுப்பு நாடு­கள் மற்­றும் ரஷ்யா ஆகி­யவை இணைந்து, தின­சரி எண்­ணெய் உற்­பத்­தியை குறைக்க ஒப்­பந்­தம் செய்­தி­ருந்­தன. இந்த உற்­பத்தி குறைப்பை, தற்­போது, மார்ச், 2020 வரை நீட்­டித்­துள்ளன.

தங்கம் வெள்ளி

சர்­வ­தேச சந்­தை­யில், தங்­கத்­தின் விலை, தொடர்ந்து நான்கு மாதங்­க­ளாக உயர்ந்து வந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. ஜூன் மாதத்­தில், 1 அவுன்ஸ் தங்­கம், 1,285 அமெ­ரிக்க டால­ராக இருந்­தது, ஆகஸ்ட் மாதத்­தில், 1,565 டால­ராக அதி­க­ரித்­தது. அதா­வது, 1 அவுன்­சுக்கு, 280 டாலர் உயர்ந்­துள்­ளது.

எம்.சி.எக்ஸ்., பொருள் வாணிப சந்­தை­யில், 1 கிராம், 3,123 ரூபா­யாக இருந்­தது, 3,941 ரூபா­யாக உயர்ந்­தது; 818 ரூபாய் உயர்ந்­துள்­ளது.வெள்ளி விலை­யா­னது, சர்­வ­தேச சந்­தை­யில், கடந்த மூன்று மாதங்­களில் மட்­டுமே உயர்வு காணப்­பட்­டது. ஜூன் மாதத்­தில், 1 அவுன்ஸ், 14.76 அமெ­ரிக்க டால­ராக இருந்த நிலை­யில், ஆகஸ்ட் மாதம், 18.75 டாலர் என்ற உச்ச நிலையை எட்­டி­யது. எம்.சி.எக்ஸ்., பொருள் வாணிப சந்­தை­யில், 1 கிராம் வெள்ளி, கடந்த மூன்று மாதங்­களில், 1 கிரா­முக்கு, 11 ரூபாய் உயர்ந்­துள்­ளது.

பல்­வேறு கார­ணங்­க­ளால், தங்­கத்­தில் விலைஏற்­றம் நிகழ்ந்­துள்­ளது.பத்து ஆண்­டு­க­ளுக்கு பின், அமெ­ரிக்க மத்­திய வங்கி, வட்டி விகி­தத்தை குறைத்­தது முக்­கி­ய­மான கார­ண­மா­கும். வட்டி விகி­தம் குறைக்­கப்­படும் என்ற எதிர்­பார்ப்­பால், முன்­கூட்­டியே ஜூன் மாதத்­தி­லேயே விலை­யேற்­றம் துவங்கி விட்­டது.

மேலும், அமெ­ரிக்­கா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, மந்த நிலை­யில் இருப்­ப­தால், அதை சரி செய்ய, வருங்­கா­லங்­க­ளி­லும் வட்டி விகி­தம் குறைக்­கப்ப­ட­லாம் என்ற எதிர்­பார்ப்­பும், தங்­கம் விலைஅதி­க­ரிப்­புக்கு கார­ண­மாக அமைந்­தது.அமெ­ரிக்க அர­சின் கரு­வூல ஆதா­யங்­கள் சரிந்து வரும் சூழ­லில், பங்­குச் சந்­தை­க­ளி­லும் சரி­வு­கள் காணப்­ப­டு­கின்றன. இதன் கார­ண­மாக, முத­லீட்­டா­ளர்­களின் பார்வை தங்­கத்­தின் மீது திரும்­பி­யது.

மேலும், அமெ­ரிக்க – சீன நாடு­க­ளுக்கு இடை­யே­யான வர்த்­தக மோதல் கார­ண­மாக ஏற்­பட்டு வரும் அசா­தா­ரண சூழ­லும், தங்­கத்­தின் விலை ஏற்­றத்­துக்கு கார­ண­மாக அமைந்து வரு­கிறது.இந்­திய சந்­தையை பொறுத்­த­வரை, டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, ஆகஸ்ட் மாதத்­தில் மட்­டும், 3 ரூபாய் அள­வுக்கு வீழ்ச்சி அடைந்­துள்­ளது. அதா­வது, மாத ஆரம்­பத்­தில், 69.20 ரூபா­யாக இருந்­தது; மாத முடி­வில், 72.30 ரூபா­யாக சரிந்­தது. இது, தங்­கத்­தின் விலை அதி­க­ரிப்­புக்கு கார­ண­மாக அமைந்­தது.

தங்­கம் மற்­றும் வெள்ளி தேவை­கள் பெரும்­பா­லும் இறக்­கு­மதி மூலமே பூர்த்தி செய்­யப்­ப­டு­கின்றன. இந்­நி­லை­யில், ரூபா­யின் மதிப்பு சரிவு கார­ண­மாக, சர்­வ­தேச சந்­தை­யைக் காட்­டி­லும் இந்­தி­யா­வில், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை கணி­ச­மாக அதி­க­ரித்து வர்த்­த­க­மாகி வரு­கிறது.கடந்த வாரத்தை பொறுத்­த­வரை, முந்­தைய வாரங்­களில், விலை அதி­க­ரித்து வர்த்­த­கம் ஆன நிலை­யில், வியா­பா­ரி­கள் லாபம் காண்­ப­தற்­காக விற்­ற­தா­லும், பங்­குச் சந்தை, கரு­வூல லாபம் ஆகி­யவை அதி­க­ரித்­த­தா­லும், தங்­கத்­தின் விலை சற்று சரிந்­தது.

இருப்­பி­னும், இதற்கு முன் கூறிய கார­ணங்­க­ளால், நீண்ட கால அடிப்­ப­டை­யில் தங்­கம் விலை உய­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. குறு­கிய கால அடிப்­ப­டை­யில், விலை­யில் ஏற்­றத்­தாழ்­வு­கள் அதி­க­மாக இருக்­கும்.

செம்பு

செம்பு, கடந்த இரு மாதங்­க­ளாக விலை சரிந்து, வர்த்­த­க­மாகி வரு­கிறது. இந்த ஆண்­டின் துவக்­கம் முத­லா­கவே, செம்­பின் விலை­யில் சரிவு ஏற்­பட்டு, வர்த்­த­க­மாகி வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

உலக நாடு­களின் ஒட்­டு­மொத்த செம்பு நுகர்­வில், சீனா­வின் பங்கு, 50 சத­வீ­தத்­துக்­கும் அதி­க­மாக உள்­ளது. மேலும், நாட்­டின் உள்­நாட்டு உற்­பத்தி, தேவைக்கு ஏற்ற அள­வில் இல்­லா­மல் பற்­றாக்­கு­றை­யாக இருப்­ப­தன் கார­ண­மாக, பிற நாடு­களில் இருந்து இறக்­கு­ம­தி­யும் செய்­யப்­ப­டு­கிறது.இவ்­வாறு இறக்­கு­மதி செய்­யப்­படும் விப­ரத்தை, அந்நாட்­டின் வர்த்­தக அமைச்­ச­கம், ஒவ்­வொரு மாத­மும், முதல் வாரத்­தில் வெளி­யி­டும்.

கடந்த எட்டு மாதங்­களில், இறக்­கு­மதி குறை­வாக இருந்­தது இதன் மூலம் தெரிய வந்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வு­ட­னான இந்­நாட்­டின் வர்த்­தக மோதல் கார­ண­மாக, தொழிற்­சா­லை­களில் ஏற்­பட்­டுள்ள உற்­பத்தி குறைவு கார­ண­மாக, செம்பு இறக்­கு­மதி குறைந்­துள்­ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)