அமலுக்கு வரும் வருமான வரி மாற்றம்அமலுக்கு வரும் வருமான வரி மாற்றம் ... தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்தது:ஆகஸ்ட் மாதத்தில் 15 மாதங்களில் இல்லாத சரிவு தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்தது:ஆகஸ்ட் மாதத்தில் 15 மாதங்களில் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை:தொண்­டரா, முத­லீட்­டா­ளரா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2019
00:15

முதல் காலாண்­டில், இந்­திய பொரு­ளா­தார வளர்ச்சி விகி­தம், எதிர்­பார்த்­ததை விட மிகக் குறை­வா­கவே அமைந்­துள்­ளது. இதைப் பற்றி பல வித­மான கருத்­து­களை, நீங்­கள் ஏற்­க­னவே பார்த்­தி­ருப்­பீர்­கள்.


இப்­போ­தெல்­லாம், செய்தி வந்­த­தும் தீர்ப்­பு­கள் சர­மா­ரி­யாக வந்து விடு­கின்றன. செய்­தியை உள்­வாங்­கு­வ­தற்­குள் கருத்து சொல்லி முடித்து விடு­வது தான் தற்­காலநடை­முறை.இத்­த­கைய கருத்­து­கள் வெளி­வர, பல சமூக மற்­றும் அர­சி­யல் கார­ணங்­கள் இருப்­பதை மறுக்க முடி­யாது. ஆனால், இது தான் எதார்த்­தம். டேட்டா அதா­வது தரவு தான் தற்­கால அர­சி­ய­லின் புதிய ஆயு­தம்.

தர­வு­கள் ஆய்­வுக்கு உகந்த கரு­வி­யாக இருப்­பதை கடந்து, கருத்து உரு­வாக்க கரு­வி­யாக மாறி விட்­டன. தர­வு­கள் வெளி­யான நிமி­டங்­களில், எதிர்­வி­னை­கள் வெளி­வ­ரு­வ­தும், அவற்­றின் மீது விவா­தம் நடப்­ப­தும் தான் இன்­றைய நிலைமை.அர­சு­கள் சார்ந்த நம் பொது அபிப்­ரா­யங்­க­ளைக் கொண்டு, அவற்றை வடி­வ­மைக்க பல­ரும் தீவி­ர­மாக முயற்­சிக்­கின்­ற­னர். குறு­கிய கால­கட்­டத்­தில், இது வெற்­றி­க­ர­மாக நடக்­க­வும் செய்­கிறது. முத­லீட்டு உல­க­மும் இதற்கு விதி­வி­லக்கு அல்ல.

இது சரியா, தவறா என்­பது நமக்கு அவ­சி­யம் இல்லை. இது, முத­லீட்­டுப் பார்­வை­களை எப்­படி மாற்­று­கிறது என்­பது தான் நம் புரி­த­லுக்கு மிக தேவை­யான ஒன்று.ஒன்றை மட்­டும் நினை­வில் கொள்­ளுங்­கள்... முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு தர­வு­கள் ஆய்­வுப் பொருள் மட்­டுமே ஒழியஆயு­தம் அல்ல.மேலும், ஒரு சில முக்­கிய புரி­தல்­க­ளுக்கு இப்­போது வரு­வோம். கடந்த ஐந்து ஆண்­டு­க­ளா­கவே, முத­லீடு சார்ந்த வளர்ச்­சிக்கு ஏற்ற சூழல் நம் நாட்­டில் இல்லை. நுகர்வு சார்ந்த வளர்ச்சி மட்­டுமே கண்­டோம்.

இதற்கு தோதாக, பண­வீக்­கத்­திற்கு எதி­ரான போரி­லும், வாராக்­க­டன்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளி­லும் நாம் அதிக நேரம் செல­விட்டு விட்­டோம்.இப்­போது பண வீக்­கம் சார்ந்த கவ­லை­கள் வெகு­வாக குறைந்­துள்ளன. அதே சம­யம், நுகர்வு சார்ந்த நம்­பிக்­கை­யும் குறைந்து விட்­டது. நுகர்வு தொடர்ந்து வளர்ச்சி அடைய தேவை­யான முத­லீ­டு­கள் தான் இப்­போ­தைய அவ­சர தேவை.

ஆனால், பெரு­மு­த­லீ­டு­கள் செய்­யக்­கூ­டிய நிலை­யில், இந்­திய நிறு­வ­னங்­கள் இல்லை. இதற்கு அவர்­களின் தவ­றான வர்த்­தக முடி­வு­களும், முன்­ந­டத்­தை­யும் மட்­டுமே கார­ணம். அவர்­கள் செய்­யத் தவ­றிய முத­லீ­டு­களை, மற்­ற­வர்­க­ளைக் கொண்டு நடத்­திக் ­கொள்ள வேண்­டிய இடத்­தில் தான் அரசு இருக்­கிறது.

இதற்கு அரசு என்ன செய்ய வேண்­டுமோ அவற்றை செய்­கி­றதா என்­பதை தான் ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரும் கூர்ந்து கவ­னிக்க வேண்­டும்.உற்­பத்தி சார்ந்த தொழில்­களில் பெரும் முத­லீ­டு­கள் அமைய வேண்­டும். அன்­னிய முத­லீ­டு­கள் முன்பு இருந்­ததை விட, பல மடங்கு பெருக வேண்­டும். உள்­நாட்டு சேமிப்­பு­கள், வருங்­கால வளர்ச்­சிக்கு வழி செய்­யும் முத­லீ­டு­களில் செலுத்­தப்­பட வேண்­டும்.

முத­லீட்டு தைரி­யம் பெருக வேண்­டும். நுகர்வு மீண்­டும் வளர்ச்­சிப் பாதைக்கு விரை­வாக திரும்ப வேண்­டும். அதை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பொரு­ளா­தார முடி­வு­கள் விரைந்து எடுக்­கப்­பட வேண்­டும்.தர­வு­கள் இது பற்றி நமக்கு தக­வல் சொல்­லு­வ­தற்­குள், சந்தை அதை கடந்து சென்று விடும். நாம் இப்­போ­தைய கொள்கை நடப்­பு­களை தெளி­வாக புரிந்து கொண்டு, சந்­தை­யில் முன்­னோ­டி­யாக இருக்க வேண்­டும்; மெது­வாக சிந்­திக்­கும் தொண்­ட­ராக மாறி­வி­டக் கூடாது.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
shyamsek@ithought.co.in

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)