அமலுக்கு வரும் வருமான வரி மாற்றம்அமலுக்கு வரும் வருமான வரி மாற்றம் ... தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்தது:ஆகஸ்ட் மாதத்தில் 15 மாதங்களில் இல்லாத சரிவு தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்தது:ஆகஸ்ட் மாதத்தில் 15 மாதங்களில் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மில்­லி­யன் டாலர் கேள்வி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2019
00:21

பொதுத்துறை வங்­கி­களை ஒருங்­கி­ணைக்­கும் முடிவை மத்­திய அரசு எடுத்­துள்­ளது, வர­வேற்­பை­யும், விமர்­ச­னங்­க­ளை­யும் ஒருங்கே பெற்­றுள்­ளது. இத­னால், கிடைக்­கப் போகும் நன்­மை­கள் என்­னென்ன?

பொதுத் துறை வங்­கி­களை ஒருங்­கி­ணைக்க வேண்­டும் என்ற கருத்து, பல ஆண்­டு­க­ளாக பேசப்­பட்டு வந்­தது. பெரிய வங்­கி­கள்­ தான் வலி­மை­யா­னவை என்ற எண்­ணத்­தில் இருந்து இந்­தக் கருத்து தொடங்­கி­யது.இதன் தொடர்ச்­சி­யா­கத்­தான், பாரத ஸ்டேட் வங்­கி­யோடு, ஐந்து துணை வங்­கி­கள் இணைக்­கப்­பட்­டன. அதன் பின், பேங்க் ஆப் பரோ­டா­வு­டன், தேனா வங்­கி­யும், விஜயா வங்­கி­யும் இணைக்­கப்­பட்­டன.

இப்­போது அடுத்த கட்ட ஒருங்­கி­ணைப்­பு­களை நிதி அமைச்­சர், நிர்­மலா சீதா­ரா­மன் அறி­வித்­துள்­ளார். 10 பொதுத் துறை வங்­கி­கள், 4 வங்­கி­க­ளாக சேர்க்­கப்­பட்­டுள்ளன.

அர்த்­த­மென்ன?

இந்த முயற்­சியை எப்­ப­டிப் புரிந்­து­கொள்ள வேண்­டும்? உங்­கள் வீட்­டில் நீங்­கள் மட்­டும் சம்­பா­திக்­கி­றீர்­கள். நாளைக்கு உங்­கள் மக­னும், மகளும் கூட வேலைக்­குப் போய் சம்­பா­திக்­கத் தொடங்­கும்­போது, உங்­கள் குடும்ப வரு­மானம் பன்­ம­டங்குஉயர்ந்­து­வி­டும் அல்­லவா?அது மாதி­ரி ­தான் இது­வும். ஒரே ஒரு வங்­கி­யின் வர­வைக் காட்­டி­லும், இரண்டு அல்­லது மூன்று வங்­கி­கள் ஒருங்­கி­ணைந்து சம்­பா­திக்­கும் ­போது, வரவு அதி­க­ரிக்­கத் தொடங்­கும் தானே?

வங்­கிக் கிளை­கள், ஏ.டி.எம்.,கள், பணி­யா­ளர் பலம், வச­தி­கள் ஆகி­யவை பகிர்ந்­து­கொள்­ளப்­ப­டும்­போது, ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட புதிய வங்­கி­யின் செல­வும் கணி­ச­மா­கக் குறை­யும். மொத்த வர­வோடு ஒப்­பி­டும்­போது, வாராக்­கடன்­களின் அள­வும் சிறுத்­துப் போகும். அது, பெரிய தொகை­யா­கத் தெரி­யாது. அது­வும் சத­வீத கணக்­கில் சொன்­னால், ஒன்­றுமே தெரி­யாது!

அளவு பெரி­தா­ன­தால், கூடுதல் கடன் கொடுக்­க­வும் முடி­யும். மேலும், அர­சாங்­கம்மறு­மூ­ல­தன தொகை கொடுக்கவி­ருப்­ப­தால், வங்கி­கள் புத்­து­ணர்ச்­சி­யோ­டும் செயல்­பட முடி­யும்.இது­வ­ரைக்கு எல்­லாமே சரி. கேள்­வி­கள் இங்­கி­ருந்­து­தான் தொடங்­கு­கின்றன.


ஏன் இப்­போது?

உண்­மை­யில், நம் பொரு­ளா­தா­ரம் பல மட்­டங்­களில் தத்­த­ளிக்­கிறது. நிதி அமைச்­சர்ஊட­கங்­க­ளை சந்­திக்­கத் தொடங்­கி­யதே, பொரு­ளா­ தாரச் சீர்­தி­ருத்­தங்­களை அறிவிப்­ப­தற்­குத் ­தான்.இந்­நி­லை­யில், வங்­கி­கள்ஒருங்­கி­ணைப்பு இப்­போது எதற்­குச் செய்­யப்­பட வேண்டும்?இப்­போது செய்­யப்­பட வேண்­டி­யது, வங்­கி­க­ளுக்­கான மறு­மு­த­லீ­டும், அதன்­மூ­லம், சிறு, குறு, நடுத்­த­ரத் தொழில்­கள் மற்­றும் தனி­ந­பர்­க­ளுக்­கான வங்­கிக் கடன் வசதி பெரு­கு­வ­தும் தானே?

சுணங்­கிப் போன பொரு­ளா­தார சுழற்­சியை முடுக்­கி­விட வேண்­டிய நேரம் இது. வங்­கிப் பணி­யா­ளர்­கள், கடன்­க­ளைக் கொடுத்து, சமூ­கத்­தில் பண ஓட்­டத்தை அதிகப்­படுத்த வேண்­டிய தரு­ணம் இது. அதற்கு தற்­போது, நன்கு விரிந்து பரந்­துள்ள வங்கிக் கிளை­கள் தான்அவ­சி­ய­மானவை.

முத­லில், இதைச் செய்து, ஓர­ள­வுக்­கு பொரு­ளா­தார சுழற்சி நிலை­பெற்­ற­வு­டன், வங்­கி­களை ஒருங்­கி­ணைக்­க­லாமே?இப்­போது என்ன நடக்­கும் தெரி­யுமா ? ஒவ்­வொரு பணி­யா­ள­ரும் தம்மை வேறு கிளைக்கு மாற்­றி­வி­டு­வார்­களோ, வேறு ஊருக்கே மாற்­றி­வி­டு­வார்­களோ என்று யோசிப்­பார்­கள்.

புதிய ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட வங்­கி­யின் காசோலை, கடன் அட்டை இதர வச­தி­களை வாடிக்­கை­யா­ளர்­களுக்கு வழங்­கும் முனைப்­பில்ஈடு­பட்­டி­ருப்­பார்­கள்.இவர்­கள் கடன் கொடுப்­ப­தற்கோ, தொழில் பெருக்­கத்­துக்கோ துணை நிற்­பார்­களா என்ன?வேறு சில கேள்­வி­களும் எழுப்­பப்­ப­டு­கின்றன. ஒருங்­கி­ணைப்­ப­தால், வங்­கிக் கடன்­களின் தரம் உய­ரப் போகி­றதா? சென்ற முறை, பாரத ஸ்டேட் வங்­கி­யோடு, ஐந்து வங்­கி­கள் இணைக்­கப்­பட்­டன.

அதன் பின்­னர், அதன் வாராக்­க­ட­னான 1.6 லட்சம் கோடி ரூபா­யோடு, இந்த ஜூன் காலாண்­டில் இன்­னும், 16 ஆயிரத்து, 212 கோடி ரூபாய் கடன் சேர்ந்­து ­கொண்­டிருக்­கிறது.பேங்க் ஆப் பரோ­டா­வோடு, தேனா வங்­கி­யும், விஜயா வங்­கி­யும் சேர்ந்த பின், அதன் லாபம் ஒன்று உயர்ந்­து­வி­ட­வில்லை என்­பதை முதல் காலாண்டு முடிவு தெரி­விக்­கிறது.

மேலும், பெரிய வங்­கி­கள் என்று பெருமை பேசு­கி­றோம். அத்­த­கைய பெரிய வங்­கி­களை உரு­வாக்க, முத­லில் வங்­கி­க­ளைத் திறம்­பட ஒருங்­கி­ணைக்க வேண்­டும். எஸ்.பி.ஐ.,க்கு ஒரு அருந்­ததி பட்­டார்­யா­வும், பேங்க் ஆப் பரோ­டா­வுக்கு ஒரு பி.எஸ்.ஜெய­கு­மா­ரும் கிடைத்­த­னர்.வங்­கித் துறை­யில் இவ்­வி­ரு­வ­ருக்­கும் உள்ள அனு­ப­வத்­தா­லும் திற­னா­லும், ஒருங்­கி­ணைப்பு சுமு­க­மாக முடி­வ­டைந்­தது.

அதே­போல், தலை­வர்­கள் கிடைப்­பார்­களா? அவர்­க­ளைத் தேட என்ன திட்­ட­மி­ருக்­கிறது?வங்­கி­கள் ஒருங்­கிணைப்பை எந்த அடிப்­படை­யில் மேற்­கொண்­டு இ­ருக்கிறார்­கள்?அவர்­கள் பயன்­ப­டுத்­தும், ‘கோர் பேங்­கிங் சிஸ்­டம்’ ஒன்­றா­னவை என்­ப­தால் இணைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கரு­த­லாம். ஆனால், ஒவ்­வொரு வங்­கி­யும் பெற்­றி­ருக்­கும் வாராக்­க­டன்­களை கூட்­டிப் பார்க்­கும்­போது, புதிய பெரிய வங்­கி­களும் வழக்­கத்­தை­விட அதி­க­மான வாராக்­க­டன்­களோடு­தான் இருக்­கின்றன.

பொதுத் துறை வங்­கி­கள் இணைப்பு என்­பது நீண்ட நாள் கோரிக்கை. வலு­வான வங்­கித் துறை நீண்ட நாள் கனவு.அது, இப்­போ­தைக்கு நிறை­வே­றி­யி­ருக்­கிறது. ஆனால், இது பொரு­ளா­தார சுணக்­கத்தை எவ்­வ­ளவு துாரம் நீக்­கும் என்­பது மில்­லி­யன் டாலர் கேள்வி!

ஆர்.வெங்­க­டேஷ்,பத்­தி­ரி­கை­யா­ளர்

pattamvenkatesh@gmail.com

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)