எல்.ஐ.சி.,யின் இலக்கு ரூ. 13 ஆயிரம் கோடிஎல்.ஐ.சி.,யின் இலக்கு ரூ. 13 ஆயிரம் கோடி ... ரூ.30 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை சற்று குறைந்தது ரூ.30 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை சற்று குறைந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சந்தையை சரித்த புள்ளி விபரங்கள் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.25 லட்சம் கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
23:33

புது­டில்லி:மும்பை பங்­குச் சந்தை குறி­யிட்டு எண், ‘சென்­செக்ஸ்’ நேற்று, 770 புள்­ளி­கள் சரி­வ­டைந்­தது.


பொரு­ளா­தார நெருக்­க­டி­கள் கார­ண­மாக, மும்பை பங்­குச் சந்­தை­யின் குறி­யீட்டு எண், ‘சென்­செக்ஸ்’ 770 புள்­ளி­களும், தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், ‘நிப்டி’, 225 புள்­ளி­களும் சரிந்­தன.


அதிகம் பாதிப்பு



மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி விகி­தம் குறைந்­தது, முக்­கி­ய­மான துறை­களின் வளர்ச்சி சரிந்­தது, வாகன விற்­ப­னை­யில் சரிவு ஏற்­பட்­டது போன்ற நிலை­மை­கள், நேற்று சந்­தை­யில் கடும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தின.வர்த்­த­கத்­தின் இடையே, 867 புள்­ளி­கள் வரை சரிந்த, ‘சென்­செக்ஸ்’, வர்த்­தக இறு­தி­யில், 769.88 புள்­ளி­க­ளாக குறைந்து, 36,592.91 புள்­ளி­களில் நிலை­பெற்­றது.



இதே­போல, ‘நிப்டி’யும், 2.04 சத­வீ­தம் சரிவு கண்டு, 225.35 புள்­ளி­களை இழந்து, வர்த்­தக முடி­வில், 10,797.90 புள்­ளி­களில் நிலை­பெற்­றது.நேற்­றைய பங்கு வர்த்­த­கத்­தில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, டாடா ஸ்டீல், வேதாந்தா, எச்.டி.எப்.சி., இண்­டஸ் இண்ட் பேங்க், டாடா மோட்­டார்ஸ், ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ், ஓ.என்.ஜி.சி., உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள், அதி­கம் பாதிப்­புக்கு உள்­ளா­கின. இவை, 4.45 சத­வீ­தம் வரை வீழ்ச்சி கண்­டன.


டெக் மகிந்­திரா, எச்.சி.எல்., டெக் ஆகிய இரு தக­வல் தொழில்­நுட்ப துறை பங்­கு­கள் மட்­டும், ரூபா­யின் மதிப்பு குறைந்­ததை அடுத்து, ஓர­ளவு விலை அதி­க­ரித்­தன.ரூபா­யின் மதிப்பு, அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ராக, 97 பைசா குறைந்து, 9 மாதங்­களில் இல்­லாத வகை­யில், 72.39 ரூபாயாக ஆனது.கிட்­டத்­தட்ட அனைத்து துறை பங்­கு­க­ளுமே நேற்று சரி­வைச் சந்­தித்­தன.


மாறாக, ஐ.டி.பி.ஐ., வங்கி பங்­கு­கள் மட்­டும், 8 சத­வீ­தம் அள­வுக்கு விலை அதி­க­ரித்­தது. ஐ.டி.பி.ஐ., வங்­கிக்கு, மத்­திய அர­சும், எல்.ஐ.சி., நிறு­வ­ன­மும் இணைந்து, 9,300 கோடி ரூபாய் மூல­தன உதவி வழங்­கு­வ­தற்கு மத்­திய அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்­தது.இத­னை­ய­டுத்து, இந்­நி­று­வன பங்­கு­கள் விலை, 7.66 சத­வீ­தம் அதி­க­ரித்து, மும்பை பங்­குச் சந்­தை­யில், 28.80 ரூபா­யாக நிலை­பெற்­றது.


வர்த்தக மோதல்


முதல் காலாண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 5 சத­வீ­த­மாக குறைந்­தது, வாகன விற்­பனை, ஆகஸ்ட் மாதத்­தில் சரிந்­தது, முக்­கி­ய­மான தொழில்­து­றை­களில், ஜூலை மாதத்­தில் ஏற்­பட்ட சரிவு, ரூபாய் மதிப்பு சரிவு உள்­ளிட்ட உள்­நாட்டு கார­ணங்­க­ளா­லும், உலக வர்த்­தக மோதல் போக்கு கார­ண­மா­க­வும், முத­லீட்­டா­ளர்­கள் அதி­க­ள­வி­லான பங்­கு­களை விற்­ற­னர். இதன் கார­ண­மாக சந்­தை­யில் சரிவு ஏற்­பட்­டது.


மேலும், வங்­கி­கள் இணைப்பு குறித்த அர­சின் அறி­விப்­பால் அத்­து­றையை சேர்ந்த பங்­கு­களும் சரிவை சந்­தித்­தன. இணைப்பு அறி­விப்­பால், பொதுத்­துறை வங்­கி­களின் பங்­கு­கள், 10.6 சத­வீ­தம் அள­வுக்கு சரிவை கண்­டன.குறிப்­பாக, கனரா வங்கி, 1.59 சத­வீ­த­மும், இந்­திய யூனி­யன் வங்கி, 9.08 சத­வீ­த­மும், பஞ்­சாப் நேஷ­னல் வங்கி, 8.55 சத­வீ­த­மும் சரி­வைக் கண்­டன.


ஒரே நாளில்...


இந்­திய பங்­குச் சந்­தை­களில் ஏற்­பட்ட சரி­வி­னால், முத­லீட்­டா­ளர்­கள், நேற்று ஒரு­நா­ளில் மட்­டும், 2.25 லட்­சம் கோடி ரூபாயை இழந்­த­னர். ‘சென்­செக்ஸ்’ தொகுப்­பில் உள்ள, 30 பங்­கு­களில், 27 பங்­கு­கள் சரிவை சந்­தித்­தன. மும்பை பங்­குச் சந்­தை­யில் இடம்­பெற்­றுள்ள, 1,613 பங்­கு­கள் சரி­வை­யும், 817 பங்­கு­கள் லாபத்­தை­யும் சந்­தித்­தன. 178 பங்­கு­கள் எந்த மாற்­ற­மில்­லா­மல் இருந்­தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)