சில்­லரை விலை பண­வீக்­கம்சில்­லரை விலை பண­வீக்­கம் ...  நிதித் துறை செயலருடன் வங்கி தலைவர்கள் சந்திப்பு நிதித் துறை செயலருடன் வங்கி தலைவர்கள் சந்திப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன துறையின் பாதிப்புக்கு வாடகை கார்களும் காரணம் நிதியமைச்சர் சொல்வது சரிதானா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2019
00:36

வாகன துறையின் தற்போதைய பாதிப்புக்கு, வாடகை கார்களை பயன்படுத்தும் இளைய தலைமுறையினர் மனநிலையும் ஒரு காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது, சமூக ஊடகங்களில் வெறும் வாய்க்கு அவலாகி உள்ளதுஆனால் ஓலா, ஊபர் போன்ற வாடகை கார்கள் சேவையால் கார் விற்பனை பாதிக்கப்படும் என்பது நிர்மலா சீதாராமன் மட்டுமல்ல பலரும் பல காலகட்டங்களில் தெரிவித்திருக்கிறார்கள். வாகன விற்பனை பாதிப்புக்கு வாடகை கார் சேவைகளுக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை அவ்வளவு எளிதாக மறுத்துவிட முடியுமா?



ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு, ’பி.எஸ். 6’ மற்றும் இளைய தலைமுறையினரின் மனநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் ஒரு வாகனத்தை வாங்குவதை விட, ஓலா மற்றும் ஊபர் சேவைகளை பயன்படுத்தவே இப்போது விரும்புகிறார்கள்.


_நிர்மலா சீதாராமன்



ஊபர், ஓலா போன்றவை, வாகனத் தொழிலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். சொந்தமாக வாகனங்களை வாங்கக்கூடிய வாய்ப்புள்ள இளைஞர்கள் இன்று, வாடகை சேவைகளையே விரும்புகிறார்கள். சொந்தமாக வாகனம் வாங்க விரும்புவதில்லை.


_ஆனந்த் மகிந்திரா, தலைவர், மகிந்திரா அண்டு மகிந்திரா10.9.2015



என்னுடைய இலக்கு மக்கள் கார்களை வாங்குவதை நிறுத்துவதுதான். ஒருவர் கார் உரிமையாளராக இருந்தார் என்பதை கடந்தகால விஷயமாக்கிவிட வேண்டும்-


_டிராவிஸ் கலானிக், நிறுவனர், ஊபர்.

பத்தாண்டுகளுக்கு முன் வால் ஸ்ட்ரீட் பேட்டியில்


இளைய தலைமுறையினர், ‘ஓலா’ மற்றும் ‘ஊபர்’ போன்ற சவாரி சேவைகளைத் தேர்ந்தெடுப்பது, வாகன விற்பனையின் தற்போதைய மந்தநிலைக்கு வலுவான காரணமாக இருக்காது. எந்தவொரு முடிவுக்கும் வருவதற்கு, விரிவான ஆய்வு தேவை.


சஷாங் ஸ்ரீவத்ஸவா


நிர்வாக இயக்குனர், ‘மாருதி சுசூகி’


மொத்த பயண தூரத்தில் வாடகை கார் சேவைகளின் பங்கு 2030ல் 35 சதவீதமாகவும், 2030ல் 50 சதவீதமாகவும் இருக்கும்.


_மார்கன் ஸ்டான்லி கணிப்பு



ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா மோட்டார்ஸ் இரண்டும் சேர்ந்து ஓலா நிறுவனத்தில் 2150 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.



மகிந்திரா நிறுவனம் 2150 கோடி ரூபாயை கிளைடு எனும் மின்சார வாடகை கார் சேவை நிறுவனத்திலும் 2800 கோடி ரூபாயை ஜூம்காரிலும் முதலீடு செய்துள்ளது.


வருவாய் தகவல்


* வாடகை கார் சேவை பிரிவில், நடப்பாண்டில் வருவாய், 2.19 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.


* வருவாய் ஆண்டு வளர்ச்சி விகிதம் 15.5 சதவீகிதம்


*வாடகை கார் சேவை சந்தை 2023ல் 3.89 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்


*பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2023ல் 20.3 சதவிகிதமாக இருக்கும்.



* ஒரு பயணி மூலமான சராசரி வருவாய் தற்போது 12,400 ரூபாய்.



**ஒப்பீடு சொந்த காரா அல்லது ஓலா, ஊபரா?



**கார் விலை, குறைந்தபட்சம்: 6 லட்சம் ரூபாய்


**ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு விலை: 1 லட்சம் ரூபாய்.


**ஆறு ஆண்டுகளில், காருக்கான தொகை: 5 லட்சம் ரூபாய்.


**ஆறு ஆண்டுகளில், நாட்கள் எண்ணிக்கை: 2,200.


**5லட்சம்/ 2,200= ஒரு நாளுக்கு 230 ரூபாய்.


**ஆண்டு காப்பீடு 15,000 ரூபாய்= ஒரு நாளுக்கு 41 ரூபாய்


**குறைந்தபட்சம் தினசரி பெட்ரோல்= 150 ரூபாய்.


**3 ஆண்டுகளுக்கு பிறகு டயர் பேட்டரி மாற்றத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்= ஒரு நாளுக்கு 23 ரூபாய்.


**ஆண்டு பராமரிப்பு செலவு 9 ஆயிரம் ரூபாய்= ஒரு நாளுக்கு 25 ரூபாய்


**6 லட்சம் ரூபாய்க்கு வட்டி இழப்பு= ஒரு நாளுக்கு 131 ரூபாய்


**டிரைவர் இருந்தால் = ஒரு நாளுக்கு 300 ரூபாய்


**கார் வாங்கியதால் மொத்த தினசரி செலவு: 900 ரூபாய்


**டிரைவர் இல்லாவிட்டால்: 600 ரூபாய்


புதிய காரா, வாடகை காரா எது லாபம்? முடிவு உங்கள் விருப்பம்


.***சேவை நிறுவனங்களில் சில

ஓலா கேப்ஸ், ஊபர், மேரு கேப்ஸ், கார்ஸோன்ரென்ட், சவாரி கார் ரென்டல்ஸ்,பாஸ்ட்டிராக் டாக்ஸி ,மெகா கேப்ஸ்,டேப் கேப்,என்.டி.எல்., மை டாக்ஸி இந்தியா***

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)