வீட்டு வசதி, ஏற்றுமதி துறையினருக்கு சலுகைகள் :மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வீட்டு வசதி, ஏற்றுமதி துறையினருக்கு சலுகைகள் :மத்திய நிதியமைச்சர், ... ... பாலிசிதாரர்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எச்சரிக்கை பாலிசிதாரர்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எச்சரிக்கை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்­கி­கள் இணைப்பு சேவை மீது தாக்­கம் செலுத்­துமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2019
23:59

பொது துறை வங்கிகள் இணைப்பு, வாடிக்கையாளர் சேவை மீது எந்த வகையில் தாக்கம் செலுத்தும் என அறிந்து கொள்வது அவசியம்.

நீண்ட கால­மாக பேசப்­பட்டு வந்த சீர்­தி­ருத்­த­மான வங்­கி­கள் இணைப்பு செயல்­வ­டி­வம் பெற்­று
உள்­ளது. பொதுத்­துறை வங்­கி­கள் இணைக்­கப்­பட்டு அவற்­றின் எண்­ணிக்கை குறைக்­கப்­படும் என, சமீபத்தில் அறி­விக்­கப்­பட்­டது. இதன்படி இந்த நிதி­யாண்­டுக்­குள், 10 பொதுத்­துறை வங்­கி­கள் இணைக்­கப்­பட்டு, நான்கு பெரிய வங்­கி­க­ளாக உரு­வாக்­கப்­பட உள்­ளன. இந்த இணைப்பு, வங்­கி­க­ளின் செயல்­தி­றனை மேம்­ப­டுத்த உத­வும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.


வங்­கி­கள் இணைப்­பால் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கம், பலன்­கள் தொடர்­பாக தீவிர விவா­தம்
நடை­பெற்று வந்­தா­லும், சேவை­கள் நோக்­கில் எந்த வகை­யான தாக்­கம் ஏற்­படும் என்­பதே, வாடிக்­கை­யாளர்­கள் மன­தில் உள்ள கேள்­வி­யாக இருக்­கிறது.


புதிய கணக்கு எண்


இணைக்­கப்­பட உள்ள வங்­கி­களின் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, இந்த இணைப்பு நிச்­ச­யம்
தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். எனி­னும், இந்த தாக்­கம் குறித்து கவ­லைப்­பட வேண்­டிய அவ­சி­யம் இல்லை என, வல்­லு­னர்­கள் கூறு­கின்­ற­னர். ஏனெ­னில், இணைப்­பால் ஒரு சில மாற்­றங்­கள் ஏற்­பட வழி­வ­குத்­தா­லும், சேவை­யில் எந்த பாதிப்­பை­யும் ஏற்­ப­டுத்­தாது. இணைப்­பில், எந்த வங்­கி­யு­டன் மற்ற வங்­கி­கள் இணைக்­கப்­ப­டு­கி­றதோ அந்த வங்கி பிர­தான வங்கி என கரு­தப்­படும். அத­னு­டன் இணை­பவை, இணைக்­கப்­படும் வங்­கி­க­ளாக கரு­தப்­படும்.


இந்த வங்­கி­க­ளின் செயல்­பா­டு­கள் பிர­தான வங்­கி­யி­டம் வழங்­கப்­படும். இணையும்
வங்­கி­யின் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கே தாக்­கம் அதி­க­மாக இருக்­கும்.இணைப்பு கார­ண­மாக, வாடிக்­கை­யா­ளர்­கள் உட­ன­டி­யாக எந்த நடவடிக்கையையும் மேற்­கொள்ள வேண்­டிய அவ­சி­யம் இருக்­காது. எனி­னும், கணக்­கு­கள் இணைக்­கப்­ப­டு­வ­தால், வருங்­கா­லத்­தில் புதிய கணக்கு எண் வழங்­கப்­ப­ட­லாம்.எனவே, இணைப்பு தொடங்கு வதற்கு முன், வங்­கி­யி­டம் சரி­யான தொடர்பு முக­வரி மற்­றும் ‘இ – மெ­யில்’ சமர்­ப்பிக்­கப்­பட்­டி­ருப்­பதை உறுதி செய்து கொள்ள வேண்­டும். மேலும், பில் கட்­ட­ணம், முத­லீடு தொகை போன்­ற­வற்­றுக்­கான தானி­யங்கி வசதி தொடர்­வ­தை­யும் உறுதி செய்து கொள்ள வேண்­டும்.வங்கி கணக்கு எண்­ணு­டன், ஐ.எப்.எஸ்.சி., குறி­யீடு எண் வழங்­கப்­பட்­டி­ருக்­கும். இணைப்­புக்கு பின், புதிய குறி­யீடு வழங்­கப்­பட்டால், பரி­வர்த்­த­னை­களில் அதை ‘அப்­டேட்’ செய்ய வேண்­டும். வரு­மான வரித்­துறை துவங்கி, என்.பி.எஸ்., திட்ட முத­லீடு வரை இதை, ‘அப்­டேட்’ செய்ய வேண்­டும்.


வட்டி விகி­தம்சில ஆண்­டு­க­ளுக்கு முன், ஸ்டேட் வங்­கி­யு­டன் அதன் துணை வங்­கி­கள் இணைக்­கப்­பட்ட போது, 1,300 கிளை­க­ளின் பெயர்­கள் மற்­றும் ஐ.எப்.எஸ்.சி., குறி­யீடு மாற்­றப்­பட்­டன.
பழைய காசோ­லை­கள் பயன்­படுத்த, ஆறு மாதம் முதல், ஓராண்டு வரை அவ­கா­சம்
அளிக்­கப்­ப­ட­லாம். ‘கிரெ­டிட்’ அல்­லது ‘டெபிட் கார்டு’களை ஒப்­ப­டைத்து புதிய கார்­டு­களை பெற்­றுக்­ கொள்­ளும் நிலை வர­லாம்.


வங்கியில் கடன் பெற்­றுள்ள வாடிக்­கை­யா­ளர்­களை பொறுத்­த­வரை, வட்டி விகி­தம் உயர வாய்ப்­பில்லை. ஏற்­க­னவே கடன் பெற்­றுள்ள விகி­தமே தொட­ரும். கடன் மாற்­றப்­பட்டு, தொடர்ந்து மாதத்­த­வணை செலுத்த வேண்­டி­இ­ருக்­கும். வட்டி விகித மாற்­றம் தொடர்­பாக மேலும் தெளிவான புரிதல் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
சென்னை:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ‘நோக்கியா’ தொழிற்சாலை ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, ... மேலும்
business news
புதுடில்லி:ஊபர் இந்தியா நிறுவனம், 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது, நாட்டில் உள்ள அதன் மொத்த ஊழியர்கள் ... மேலும்
business news
மும்பை:அண்மைக் காலமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘ஜியோ பிளாட்பார்மில்’ ... மேலும்
business news
மும்பைகடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 1.2 சதவீதமாக இருக்கும் என்று, ... மேலும்
business news
தான தர்மம் செய்பவர்களாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளியோருக்கு உதவுபவர்களாலும் தான், உலகத்தில் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)