நேரடி வரி வசூல் வருவாய் குறைந்தது; ஜி.எஸ்.டி., வரி சலுகைகளை பாதிக்குமா? நேரடி வரி வசூல் வருவாய் குறைந்தது; ஜி.எஸ்.டி., வரி சலுகைகளை பாதிக்குமா? ...  45 நாட்களுக்குள்ளாக ரூ.20,000 கோடி நிதியம் 45 நாட்களுக்குள்ளாக ரூ.20,000 கோடி நிதியம் ...
கார்பரேட் வரி குறைப்பு: பங்குச்சந்தைகள் அதிரடி ஏற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2019
12:03

மும்பை : கார்பரேட் வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக ஏற்றம் கண்டன.

பொருளாதார மந்தம்
பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இரு வாரங்களுக்கு முன்னர் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து ஜிஎஸ்டி., வரியை குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கார்பரேட் வரி குறைப்பு
இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசும்போது, உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 25.17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் உடன் செஸ் மற்றும் இதர வரிகளும் அடக்கம். எந்த ஊக்கத்தொகையும், சலுகைகளும் பெறாத உள்நாட்டு நிறுவனங்கள் 22 சதவீதம் கார்பரேட் வரி செலுத்தினால் போதும். அக்., 1க்கு பிறகு துவங்கப்படும் புதிய உள் நாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 17.01 சதவீதமும், எந்த சலுகையும் பெறாதாவர்களுக்கு 15 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஏப்.,1 முதலே இது அமலுக்கு வருகிறது. இந்த வரி குறைப்பு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் குறையும் என்றார்.

பங்குச்சந்தைகளில் அதிரடி ஏற்றம்
இந்திய பங்குச்சந்தைகள் காலையில் வர்த்தகம் துவங்கும் போது சென்செக்ஸ் 100 புள்ளிகளும், நிப்டி 23 புள்ளிகளும் உயர்வுடன் துவங்கின. நிதியமைச்சரின் அறிவிப்புக்கு பின்னர் அதிரடியாக ஏற்றம் கண்டன பங்குச்சந்தைகள். காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 1600 புள்ளிகளும், நிப்டி 450 புள்ளிகளும் ஏற்றம் கண்டன. தொடர்ந்து பகல் 1.45 மணியளவில் மேலும் உயர்ந்து சென்செக்ஸ் 2000 புள்ளிகளை கடந்தது. வர்த்தகம் முடியும்போது, சென்செக்ஸ் 1921.15 புள்ளிகள் உயர்ந்து 38, 014. 62 ஆகவும், நிப்டி 569.4 புள்ளிகள் உயர்ந்து 11,274.2 ஆக நிறைவடைந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் ... மேலும்
business news
வாஷிங்டன்:அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ’நாசா’ உருவாக்கிய, ‘வென்டிலேட்டர்’களை, அதற்கு தயாரித்து ... மேலும்
business news
சென்னை:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ‘நோக்கியா’ தொழிற்சாலை ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, ... மேலும்
business news
புதுடில்லி:ஊபர் இந்தியா நிறுவனம், 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது, நாட்டில் உள்ள அதன் மொத்த ஊழியர்கள் ... மேலும்
business news
மும்பை:அண்மைக் காலமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘ஜியோ பிளாட்பார்மில்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)