பதிவு செய்த நாள்
26 செப்2019
05:58
புதுடில்லி : ஆசிய மேம்பாட்டு வங்கி, நடப்பு நிதியாண்டுக்கான, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை, 6.5 சதவீதமாக குறைத்து கணித்துள்ளது.
இது குறித்து, இவ்வங்கியின் ஆய்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளதாவது:ஏப்ரல் முதல், ஜூன் மாதம் வரையிலான, முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 5 சதவீதமாக குறைந்துவிட்டது. இதன் அடிப்படையில், நடப்பு நிதியாண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.5 சதவீதமாக குறைந்து இருக்கும்.முதல் காலாண்டில், தயாரிப்பு துறையில் சரிவு, பொதுத் தேர்தலை முன்னிட்டு, முதலீட்டு துறையில் ஏற்பட்ட மந்த நிலை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில் ஏற்பட்ட சரிவு, கிராமப்புற பொருளாதார பலவீனம் என, பல்வேறு காரணங்களால், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, சரிவைக் கண்டது.
இந்த பாதிப்புகளின் அடிப்படையில், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி விகிதம், 6.5 சதவீதமாக குறைத்து கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி, 7.2 சதவீத வளர்ச்சியை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|