பதிவு செய்த நாள்
26 செப்2019
06:00
புதுடில்லி : ‘மாருதி சுசூகி’ நிறுவனம், குறிப்பிட்ட சில மாடல் கார்களுக்கு, 5,000 ரூபாய் வரை, விலையை குறைத்து அறிவித்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, அதன் குறிப்பிட்ட சில மாடல் கார்களுக்கு, விலை குறைப்பை அறிவித்து உள்ளது.‘ஆல்டோ 800, ஆல்டோ கே 10, சுவிப்ட் டீசல், செலிரியோ, பலேனோ டீசல், இக்னிஸ், டிசையர் டீசல், டூர் எஸ்., டீசல், விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்.கிராஸ்’ ஆகிய கார்களுக்கு, விலை குறைப்பை, மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த மாடல் கார்களின் விலை, 2.93 லட்சத்திலிருந்து, 11.49 லட்சம் ரூபாய் வரை உள்ளது.
இந்த புதிய விலை குறைப்பு, நேற்றிலிருந்து நாடு முழுவதுக்கும் அமலுக்கு வருவதாக, மாருதி தெரிவித்துள்ளது.தற்போது வழங்கப்பட்டு வரும் சலுகைகளுக்கும், இந்த விலை குறைப்புக்கும் சம்பந்தமில்லை. சலுகைகள் தனியாக வழங்கப்படுபவை எனவும், மாருதி தெரிவித்துள்ளது.இந்த விலை குறைப்பானது, முதன் முறையாக கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவும் எனவும், மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|