பதிவு செய்த நாள்
26 செப்2019
11:06

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்த நிலையில் இன்று(செப்.,26) அதிக உயர்வுடன் துவங்கி உள்ளன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முன்னணி நிறுவன பங்குகள் சரிந்தததால் நேற்று சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்தது. ஆனால், இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 384 புள்ளிகளும், நிப்டி 120 புள்ளிகளும் உயர்வுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதாலும், உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றத்தாலும் பங்குச்சந்தைகள் மேலும் உயர்ந்தன. காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 418 புள்ளிகள் உயர்ந்து 39,011.69ஆகவும், நிப்டி 132.35 புள்ளிகள் உயர்ந்து 11,572.55ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு உயர்வு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பது போன்று ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.70.90ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|