மறு ஆய்வில், ‘59 நிமிடங்களில் கடன்’ திட்டம்; மேலும் பயனுள்ளதாக மாற்ற இருப்பதாக அறிவிப்புமறு ஆய்வில், ‘59 நிமிடங்களில் கடன்’ திட்டம்; மேலும் பயனுள்ளதாக மாற்ற ... ...  பண்டிகை கால, ‘ஷாப்பிங்’ பண்டிகை கால, ‘ஷாப்பிங்’ ...
உலகின், ‘டாப் – 1௦’ பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2019
03:37

புதுடில்லி: உலகின் முதல், 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில், முதல் முறையாக, இந்தியாவைச் சேர்ந்த, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவர், முகேஷ் அம்பானி, 62, இணைந்துள்ளார்.

அந்தப் பட்டியலில் இவர், எட்டாவது இடத்தை, ‘கூகுள்’ நிறுவனத்தின், செர்கி பிரின் உடன் பிடித்துள்ளார்.‘லுாங் பேலஸ் – ஹுருன் குளோபல் ரிச் – 2019’ பட்டியல் நேற்று வெளியானது. அதில், உலக அளவில் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்களான, கோடீஸ்வரர்கள் பட்டியல் இடம் பெற்றது.

அதில், இந்தியாவின் முதல் பெரிய பணக்காரராக, தொடர்ந்து எட்டாவது ஆண்டாக முகேஷ் அம்பானி விளங்குகிறார்.அவருக்கு, 3 லட்சத்து, 80 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன. இவர், உலகின் டாப் – 10 கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் முதல் முறையாக இடம் பிடித்துள்ளார்.முகேஷ் அம்பானி நடத்தும் தொழில் நிறுவனங்களின் மதிப்பு, 7 லட்சத்து, 39 ஆயிரத்து, 100 கோடி ரூபாய். அவரின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை விட, 3 சதவீதம் உயர்ந்து உள்ளது.

நாட்டின் முதல், 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில், பெண்கள் யாரும் இடம் பெறவில்லை
சொத்து மதிப்பு, 1000 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் எண்ணிக்கை, இந்த ஆண்டில், ௯௫௩ ஆக உயர்ந்து உள்ளது கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல், 25 பேரின் சொத்து மதிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 10 சதவீதமாக உள்ளது

இந்த ஆண்டு பட்டியல்படி, இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு, 2 சதவீதம் உயர்ந்துள்ளது அதிக கோடீஸ்வரர்கள் வசிக்கும் நகரமாக, மும்பை விளங்குகிறது. அங்கு, 246 கோடீஸ்வரர்கள் வசிக்கின்றனர். டில்லியில், ௧௭௫; பெங்களூரில், 77 பேர் வசிக்கின்றனர்

தானாக உருவான தொழிலதிபர்கள் வரிசையில், ‘ஓயோ’ நிறுவனத்தின், 25 வயதாகும் ரிதேஷ் அகர்வால், 7,500 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டுள்ளார்

உலக அளவிலான பட்டியலில், ‘எச்.சி.எல்., கம்ப்யூட்டர்’ நிறுவனத்தின் ரோஷ்னி நாடார், ‘கோத்ரெஜ்’ குழுமத்தின் ஸ்மிதா வி கிருஷ்ணா, ‘பயோகான்’ நிறுவனத்தின், கிரண் மஜும்தார் போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.கோடீஸ்வரர்களில் சீனா முன்னிலை* உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், தொடர்ந்து நான்காவது ஆண்டாக சீனா முன்னிலை வசிக்கிறது; அந்த நாட்டில், 948 பேர் உள்ளனர். அமெரிக்காவில், 584 பேர் உள்ளனர். அடுத்த இடங்களை, ஜெர்மனி, பிரிட்டன், இந்தியா பெறுகின்றன

* சீனாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர், ‘அலிபாபா’ நிறுவனத்தின், ஜாக் மா* அதிக கோடீஸ்வரர்கள் வசிக்கும் நகரமாக, பீஜிங் நகரம் விளங்குகிறது* இந்த ஆண்டில், உலகம் முழுதும், 2,470 பெரிய கோடீஸ்வரர்கள் உள்ளனர். இது, கடந்த ஆண்டை விட, 224 குறைவு* கோடீஸ்வரர்களின் பணம் குவிக்கும் தொழிலில் முதலிடத்தைப் பிடிப்பது, தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் தொலை தொடர்பு; இரண்டாவது இடத்தில், ரியல் எஸ்டேட்; மூன்றாவது இடத்தில், முதலீடு; நான்காவது இடத்தில், உற்பத்தி துறை; ஐந்தாவது, உணவு, பானங்கள் தயாரிப்பு உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)