பதிவு செய்த நாள்
28 செப்2019
06:06
புதுடில்லி : ‘மாருதி சுசூகி’ நிறுவனம், இரண்டாவது முறையாக, விலை குறைப்பை அறிவித்துள்ளது.
பலேனோ காரின் விலையில், 1 லட்சம் ரூபாயை குறைத்து அறிவித்துள்ளது.கார்ப்பரேட் வரி குறைப்பை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததை அடுத்து, மாருதி சுசூகி நிறுவனம், அதன் குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்கு, 5,000 ரூபாய் விலை குறைப்பை அறிவித்தது.‘ஆல்டோ 800, ஆல்டோ கே 10, சுவிப்ட் டீசல், செலிரியோ, பலேனோ டீசல், இக்னிஸ், டிசையர் டீசல், டூர் எஸ்., டீசல், விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்.கிராஸ்’ ஆகிய கார்களுக்கு, 5,000 ரூபாய் விலை குறைப்பை அறிவித்தது.
விலை குறைப்பு, 25ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் அமலுக்கு வருவதாகவும், இந்த விலை குறைப்பானது, முதன் முறையாக கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவும் எனவும், மாருதி நிறுவனம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், தற்போது அதன் பிரபலமான காரான, பலேனோ ஆர்.எஸ்., மாடலுக்கு, 1 லட்சம் ரூபாய் விலை குறைப்பை அறிவித்துள்ளது.நவராத்திரி, தீபாவளி பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலை குறைப்பு நடவடிக்கையானது, வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவும் மந்த நிலையை மாற்றியமைக்கும் என, மாருதி நிறுவனம் கருதுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|