‘ஸ்கல்கேண்டி இயர்பட்ஸ்’ ‘ஸ்கல்கேண்டி இயர்பட்ஸ்’ ...  ஹூவாவே மேட் 30 ஹூவாவே மேட் 30 ...
‘நச்’னு தோன்ற பிட்னஸ் பேண்டுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2019
04:28

ஆரோக்கியத்தை பேணும் வகையில், ஆயிரத்தெட்டு, ’பிட்னஸ் பேண்டுகள்’ சந்தையில் குவிந்து கிடக்கின்றன. வாரத்துக்கு, இரண்டு புதிய பேண்டுகள் உலகில் அறிமுகம் ஆகின்றன. இந்நிலையில், நமக்கு தேவையானதை கண்டுகொள்வது மிகவும் சிரமமாகி வருகிறது. எளிதான வழி, பட்ஜெட் அடிப்படையில் தேடுவது தான். அந்த வகையில், 3,500 ரூபாய்க்குள் கிடைக்கும் ஓரளவு சிறப்பான, பிட்னஸ் பேண்டுகளில் சில உங்கள் பார்வைக்கு:‘சயோமி மி பேண்டு 4’இந்த மாத ஆரம்பத்தில், இந்தியாவில் அறிமுகம் ஆனது. ’மி பேண்டு 3’யின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இது. முழுமையான கலர் டிஸ்பிளே, 135 எம்.ஏ.எச்., பேட்டரி, 16 எம்பி ராம், 5.0 புளுடூத் என கலக்கலாகவே இருக்கிறது.விலை: 2,299 ரூபாய்***‘சாம்சங் கேலக்ஸி பிட் இ’இதன், 128 x 64 பிக்ஸல் பி.எம்.ஓ.எல்.இ.டி., டிஸ்பிளே வெகு சிறப்பு. எடுத்து வைக்கும் காலடி எண்ணிக்கை, இதய துடிப்பு, ரத்த அழுத்தம், கலோரி, துாக்கம் என அனைத்தையும் கண்காணித்து தெரியப்படுத்தும் வசதி உள்ளது. இதன் பேட்டரி, ஆறு நாட்கள் நீடித்து நிற்கும். புளுடூத் 5.0 இணைப்பை ஏற்கும் வசதியும் உள்ளது.விலை: 2,490 ரூபாய்***‘ஹானர் பேண்டு 5’முழு வண்ண அமோல்டு ஸ்கிரீன் கொண்டது. ரியல் டைம் இதய துடிப்பு கண்காணிப்பு வசதி, துாக்கத்தை அளவிடுவது, நீர் புகா தன்மை ஆகியவற்றுடன், 14 நாட்களுக்கு நீடித்து நிற்கும் பேட்டரி வசதியும் கொண்டதாக இருக்கிறது.விலை: 2,599 ரூபாய்***‘கோகி விட்டல் 2.0’ஓ.எல்.இ.டி., கலர் டிஸ்பிளே கொண்ட இதில், ரத்த கொதிப்பை கண்காணிக்கும் வசதியும் இருக்கிறது. மேலும், இதய துடிப்பையும் கவனித்துக் கொள்ளலாம். இவை தவிர, பிற பிட்னஸ் பேண்டுகளில் இருக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளன.விலை: 3,490 ரூபாய்***

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)