பதிவு செய்த நாள்
29 செப்2019
04:35
புதுடில்லி: லட்சுமி விலாஸ் வங்கிக்கு எதிராக, துரித தடுப்பு நடவடிக்கையை துவங்கி உள்ளது, ரிசர்வ் வங்கி. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதிகளவிலான வாராக்கடன் மற்றும் இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதற்கு போதுமான நிதியாதாரம் இல்லாதது ஆகிய காரணங்களால், வங்கி மீது இந்த நடவடிக்கையை, ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாக தெரிகிறது.
துரித தடுப்பு நடவடிக்கை என்பது, வங்கி நிதி செயல்பாடுகளில் திருப்தி இல்லாத நிலையில், அதன் செயல்திறனை மேம்படுத்த, ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கையாகும். இதனால், வங்கியின் அன்றாட நடவடிக்கைகள் எதுவும் பாதிப்புக்குள்ளாகாது.லட்சுமி விலாஸ் வங்கி, ரெலிகேர் பின்வெஸ்ட் நிறுவனத்தின், 790 கோடி ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக, டில்லி பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.சமீபத்தில், லட்சுமி விலாஸ் வங்கி – இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்களின் இணைப்புக்கான அனுமதி கேட்டு, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி, இத்தகைய துரித தடுப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.இதற்கிடையே, இந்தியா புல்ஸ், போலி நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை கடனாக வழங்கி இருப்பது பற்றிய ஒரு குற்றச் சாட்டை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, டில்லி உயர் நீதிமன்றம் வெள்ளியன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.விசாரணைகளுக்குப் பிறகே, வங்கியில் என்ன நடந்துள்ளது என்பது தெரிய வரும் என்கின்றனர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|