பதிவு செய்த நாள்
01 அக்2019
04:46
புதுடில்லி: ரிசர்வ் வங்கி, மீண்டும் ஒருமுறை வட்டியை குறைக்க வாய்ப்பிருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ரிசர்வ் வங்கி, அதன், 3 நாட்கள் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்துக்குப் பின், 4ம் தேதியன்று முடிவுகளை அறிவிக்க உள்ளது.
அதில், மீண்டும் ஒரு வட்டி குறைப்பு இருக்கலாம் என, கருதப்படுகிறது.நடப்பு ஆண்டில், ரிசர்வ் வங்கி, தொடர்ந்து நான்கு முறை வட்டியை குறைத்துள்ளது. இதுவரை, 1.10 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டு இருக்கிறது.பல நிபுணர்கள், குறைந்த பணவீக்கம் காரணமாக, ரிசர்வ் வங்கி, மேலும் ஒரு வட்டி குறைப்பை அறிவிக்கலாம் என கருதுகிறார்கள்.
இது குறித்து, நிபுணர்கள் கூறியதாவது:அன்ஷுமான், தலைவர், சி.பி.ஆர்.இ., நிறுவனம்: பொருளாதாரத்தை வலுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தேவையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, வட்டிவிகிதம் மேலும், 25 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.15 சதவீதமாகும் என, எதிர்பார்க்கிறோம்.
சுயாஷ் சவுத்ரி, தலைவர், ஐ.டி.எப்.சி., ஏ.எம்சி.: சில்லரை பணவீக்கம், ஆகஸ்ட்டில் சிறிது அதிகரித்து, 3.21 சதவீதமாக இருந்தாலும், அது ரிசர்வ் வங்கியின் கட்டுக்குள் தான் உள்ளது.உள்நாடு மற்றும் உலகளாவிய அளவில், சூழல் மிகவும் பலவீனமாகவே உள்ளது. எனவே, வட்டி விகிதம், 5 முதல், 5.25 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|